இந்தியாவைப் போன்ற மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடையாத நாடுகளுக்கு இந்த வகை எல்.இ.டி. பல்புகள் ஒரு பெரிய வரப்பிரசாதம் என்று கூறலாம். ஆனால், இந்த பல்புகளை ஏழை, எளிய மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாதபடி இவற்றின் விலை ரூ.350க்கும் ரூ.600க்கும் இடையில் உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தி, மின்சாரத்தை சேமிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவ முடியும். இதன் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம் என முடிவெடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, முதல் கட்டமாக நாட்டிலுள்ள நூறு முக்கிய நகரங்களின் தெரு விளக்குகளில் எல்.இ.டி. பல்புகளை பொருத்த முடிவு செய்தது. இதேபோல், இந்த நூறு நகரங்களில் வாழும் மக்களுக்கு அடுத்த (2016) ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மலிவு விலையில் எல்.இ.டி. பல்புகளை வழங்கவும் திட்டமிட்டது. இந்த திட்டத்தின் முதல்கட்டமாக தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு எல்.இ.டி. பல்புகளை அளிக்கும் திட்டத்தை இன்று மோடி துவக்கி வைத்தார். வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கும் எல்.இ.டி. பல்புகளை 130 ரூபாய் விலைக்கு அரசு வழங்குகின்றது.
இதில் 10 ரூபாயை மட்டுமே முன்பணமாக செலுத்தி பல்புகளை பெற்றுக் கொள்ளலாம். மீதி தொகையை 12 தவணைகளாக மாதாந்திர மின்சார பில்லுடன் சேர்த்துக் கட்டினால் போதும் என்பது ’பிரகாசப் பாதை’ திட்டத்தின் சிறப்பம்சமாகும்.அரசு வழங்கும் இந்த பல்புகள் ஒவ்வொன்றும் 36 மாத ‘கியாரண்ட்டி’ கொண்டதாகும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஒரு பல்ப் அல்லது டியூப்லைட்டுக்கு பதிலாக ஒரு எல்.இ.டி. பல்பை பொருத்துவதன் மூலமாக மட்டும் சராசரி மின் கட்டணத்தில் ஆண்டுதோறும் சுமார் 162 ரூபாயை மிச்சப்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப் வழங்கும் திட்டம் மற்றும் இந்த பல்புகளைப் பெற விரும்பும் டெல்லிவாசிகள் தங்களது பெயர்களை பதிவு செய்யும் இணையதளம் ஆகியவற்றை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, மின்சாரத்தை உற்பத்தி செய்வதைவிட சிக்கனப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மிச்சப்படுத்தலாம். இதன் மூலம் மின்சார உற்பத்திக்கான இறக்குமதி செலவினங்கள் குறையும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே