2–வது விக்கெட்டுக்கு ரோஜர்சுடன், வாட்சன் ஜோடி சேர்ந்து விளையாடினர். ஆனால் இஷாந்த் சர்மா இந்த ஜோடியை பிரித்தார். அவரது பந்தில் வாட்சன் 17 ரன்னில் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ரோஜர்ஸ் சிறப்பாக விளையாடி 81 பந்தில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். இந்த தொடரில் அவர் அடித்த 4–வது அரை சதம் ஆகும். ஒட்டு மொத்தமாக 8–வது அரை சதத்தை எடுத்தார்.
முதல் இன்னிங்சில் 192 ரன் குவித்த சுமித் இந்த முறை 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை உமேஷ்யாதவ் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 131 ஆக இருந்தது. அதை தொடர்ந்து ரோஜர்ஸ் 69 ரன்னில் அஸ்வின் பந்திலும், ஜோ பர்ன்ஸ் 9 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் மார்ஷ் பொறுப்புடன் ஆடினார். 6–வது விக்கெட்டாக ஹாடின் உமேஷ் யாதவ் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு களமிறங்கிய மிட்சல் ஜான்சனும் 15 ரன்னில் நடையை கட்டினார். நேற்றைய ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. அப்போது மார்ஷ் 62 ரன்களுடனும், ஹாரிஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், கடைசி நாளான இன்று தனது 2-வது இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடர்ந்தது. மார்ஷ் – ஹாரிஸ் தொடர்ந்து விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய மார்ஷ் அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு முக்கிய பங்கு வகித்தார். ஹாரிஸ் 21 ரன்கள் எடுத்த போது முகமது சமி வீசய பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சதம் அடிப்பார் என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட போது 99 ரன்னில் கோலியால் ரன்அவுட் செய்யப்பட்டார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வீழ்ந்த நிலையில் 318 ரன்களில் தனது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இதனால் ஆஸ்திரேலியா 383 ரன்கள் முன்னிலை பெற்றது. 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே