3–வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 326 ரன் முன்னிலை!…

மெல்போர்ன்:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3–வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 530 ரன் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 462 ரன் குவித்து இருந்தது.வீராட் கோலி 169 ரன்னும், ரகானே 147 ரன்னும் எடுத்து முத்திரை பதித்தனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 3 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி எஞ்சிய 2 விக்கெட்டை இழந்தது. 128.5 ஓவரில் 465 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இது ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரைவிட 65 ரன் குறைவாகும். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாரிஸ் 4 விக்கெட்டும், ஜான்சன் 3 விக்கெட்டும், லயன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதை தொடர்ந்து ஆஸ்திரேலியா 2–வது இன்னிங்சை ஆடியது. இன்றும் வழக்கம் போல் வார்னரின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. எனினும் வார்னரை 40 ரன்னில் அஸ்வின் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். அப்போது ஸ்கோர் 57 ஆக இருந்தது.2–வது விக்கெட்டுக்கு ரோஜர்சுடன், வாட்சன் ஜோடி சேர்ந்தார். மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன் எடுத்து இருந்தது. ரோஜர்ஸ் 33 ரன்னும், வாட்சன் 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மழையால் ஆட்டம் தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. 1½ மணி நேரம் பாதிப்புக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 3–வது ஓவரில் இஷாந்த் சர்மா 2–வது விக்கெட் ஜோடியை பிரித்தார். அவரது பந்தில் வாட்சன் 17 ரன்னில் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது ஸ்கோர் 98 ஆக இருந்தது. அடுத்து கேப்டன் சுமித் களம் வந்தார். 25.4–வது ஓவரில் ஆஸ்திரேலியா 100 ரன்னை தொட்டது. ரோஜர்ஸ் சிறப்பாக விளையாடி 81 பந்தில் 6 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார். இந்த தொடரில் அவர் அடித்த 4–வது அரை சதம் ஆகும். ஒட்டு மொத்தமாக 8–வது அரை சதத்தை எடுத்தார்.

முதல் இன்னிங்சில் 192 ரன் குவித்த சுமித் இந்த முறை 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை உமேஷ்யாதவ் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 131 ஆக இருந்தது. அதை தொடர்ந்து ரோஜர்ஸ் 69 ரன்னில் அஸ்வின் பந்திலும், ஜோ பர்ன்ஸ் 9 ரன்னில் இஷாந்த் சர்மா பந்திலும் ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் மார்ஷ் பொறுப்புடன் ஆடினார். ஆஸ்திரேலியா 54.4–வது ஓவரில் 200 ரன்னை தொட்டது. 6–வது விக்கெட்டாக ஹாடின் ஆட்டமிழந்தார். அவர் 13 ரன்களே எடுத்தார். உமேஷ் யாதவ் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 202 ஆக இருந்தது. அதன் பிறகு களமிறங்கிய மிட்சல் ஜான்சனும் 15 ரன்னில் நடையை கட்டினார். இன்றைய ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் குவித்தது. அப்போது மார்ஷ் 62 ரன்களுடனும், ஹாரிஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். நாளை ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய இப்போட்டியை வென்று தொடரை கைப்பற்ற தீவிர முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago