இந்நிலையில் சுமித்துடன் ஜோடி சேர்ந்த ஜான்சன் இந்திய பந்து வீச்சை விளாசி 37 பந்தில் அரை சதம் அடித்தார். அதன்பின் கேப்டன் சுமித் சதம் அடித்தார். இது அவருக்கு 6–வது சதம் ஆகும். கேப்டனாக அறிமுகமான டெஸ்ட்டில் அவர் சதம் அடித்து முத்திரை பதித்தார். உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம் தொடங்கிய போது ஜான்சன் 88 ரன்னில் அவுட் ஆனார். அதே ஓவரிலேயே ஸ்மித்தும் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இஷாந்த் சர்மா பந்தில் தொடர்ந்து 2 பவுண்டரி அடித்தார். லயன் தன் பங்குக்கு 23 ரன் எடுத்து அவுட் ஆனார். கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க்குடன் ஹாசில்வுட் ஜோடி சேர்ந்தார். ஹாசில்வுட் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்க, ஸ்டார்க் 53 பந்தில் அரை சதம் அடித்தார். அடுத்த சில நிமிடங்களில் 52 ரன்னில் ஸ்டார்க் அவுட்டாக ஆஸ்திரேலியா 505 ரன்களில் ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியாவை விட 97 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. வழக்கம்போல் விஜய்யும், தவானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இன்றைய ஆட்டத்தில் விஜய் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மீசைக்கார தவான் பொறுமையாக விளையாடினார். இந்நிலையில் 39 பந்துகளை சந்தித்து 27 ரன்களை எடுத்திருந்த விஜய் ஸ்டார்க் பந்தில் க்ளீன் போல்டு ஆனார். இதையடுத்து புஜாரா தவானுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பாதுகாத்து ஒன்றிரண்டாக ரன்களை சேர்த்து வந்தனர்.
இன்று ஆட்ட நேர இறுதியில் 23 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே