காயமடைந்த 45-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்கள் 500 பேரை தீவிரவாதிகள் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிரவாதிகள் ராணுவ உடையணிந்து பள்ளிக்குள் நுழைந்ததாக இச்சம்பவத்தை பார்த்த ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு தெரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்பதாக கூறியுள்ளதுடன், ஆறு தீவிரவாதிகளும் தற்கொலைப்படையாக பள்ளிக்குள் புகுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் பள்ளிக்குள் புகுந்ததையடுத்து பள்ளியை சுற்றி வளைத்த பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நீடித்து வருவதாகவும் தொலைக்காட்சி ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி