காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத கேப்டன் டோனி நாளைய போட்டியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விர்த்திமான் சகா இடம் பெறமாட்டார் என்று தெரிகிறது.முதல் டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. அதை நழுவவிட்டதோடு ‘டிரா’ செய்யவும் தவறிவிட்டனர். இதனால் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு வீரர்களின் அனுபவமின்மையே காரணம். வீராட்கோலி கேப்டன் பதவியில் அறிமுக டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து முத்திரை பதித்தார். தோல்வியால் செஞ்சூரி பலன் இல்லாமல் போனது. தமிழக வீரர் முரளிவிஜய், ரகானே, புஜாரா ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் பிரிஸ்பேன் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் ரன்களை குவிப்பது என்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும்.
புவனேஸ்வர் குமார் இல்லாதது பந்துவீச்சில் பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் டெஸ்டில் இடம் பெற்ற இஷாந்த்சர்மா, முகமது ஷமி, வருண் ஆரோன் ஆகியோர் நாளைய டெஸ்டிலும் இடம் பெறுவார்கள். உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டால் ஆரோன் அல்லது ஷமி நீக்கப்படலாம். முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின் அடிலெய்ட் டெஸ்டில் நீக்கப்பட்டது ஆச்சரியமான ஒன்றாகும். கரண்சர்மா இடத்தில் அவர் இடம் பெறுவார்.முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு 2–வது டெஸ்டில் இந்திய அணி பதிலடி கொடுக்க முடியுமா? என்பது கடினமானதே. வீரர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பதிலடி கொடுக்கலாம்.ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் காயம் அடைந்ததால் எஞ்சிய 3 டெஸ்டுக்கு ஸ்டீவன் சுமித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய டெஸ்டுக்கான 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது.வேகப்பந்து வீரர் சிடில் நீக்கப்பட்டுள்ளார். ஹாரிஸ் லேசான தசைப்பிடிப்பு காரணமாக விலகியுள்ளார். மைக்கேல் ஸ்டார்க், ஹாஸ்லே வுட் இடம் பெற்று உள்ளனர். கிளார்க் இடத்தில் ஷான் மார்ஷ் ஆடுகிறார்.ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. இதனால் அந்த அணி பிரிஸ்பேன் டெஸ்டிலும் வென்று 2–0 என்ற முன்னிலை பெற முயற்சிக்கும். வார்னர், கேப்டன் சுமித் ஆகியோர் பேட்டிங்கிலும், ஜான்சன், லயன் ஆகியோர் பவுலிங்கிலும் சிறப்பான நிலையில் உள்ளனர்.நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே