இந்தியா–ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: வார்னர் அதிரடி சதம்!…

அடிலெய்டு:-இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. டோனி உடல் தகுதியுடன் இல்லாததால் இன்றைய டெஸ்டில் விளையாடவில்லை. இதனால் வீராட்கோலி கேப்டனாக டெஸ்டில் அறிமுகமானார். விர்த்திமான் சாகா விக்கெட் கீப்பராக இடம்பெற்றார். 3 வேகப்பந்து, ஒரு சுழற்பந்து வீரருடன் இந்தியா களம் இறங்கியது. சுழற்பந்தில் முன்னணி வீரர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. புதுமுக வீரர் கரண்சர்மா இடம் பெற்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். வார்னரும், ரோஜர்சும் தொடங்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் தொடக்கத்தில் இருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வருண் ஆரோன், ஷமி பந்தை விளாசினார். இஷாந்த் சர்மா தொடக்க ஜோடியை பிரித்தார். தனது 2–வது ஓவரில் அவர் ரோஜர்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் 9 ரன்களே எடுத்தார். அப்போது ஸ்கோர் 50ஆக இருந்தது. அடுத்து வாட்சன் களம் வந்தார். இஷாந்த்சர்மா பவுன்சர்களாக வீசி அவரை அச்சுறுத்தினார். அதே நேரத்தில் மறுமுனையில் இருந்த வார்னரின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

வாட்சன் 14 ரன்னில் ஆரோன் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 88ஆக இருந்தது. 3–வது விக்கெட்டுக்கு வார்னருடன் கிளார்க் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 113 ரன் எடுத்து இருந்தது. வார்னர் 77 ரன்னிலும், கிளார்க் 9 ரன்னிலும் இருந்தனர்.மதிய உணவு இடை வேளைக்கு பிறகு வார்னர் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 106 பந்துகளில் 14 பவுண்டரியுடன் அவர் 100 ரன்னை தொட்டார். 33–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 10–வது செஞ்சூரி ஆகும். இந்தியாவுக்கு எதிராக 2–வது சதத்தை பதிவு செய்தார்.இதேபோல் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க்கும் இந்திய பந்துவீச்சை விளாசி தள்ளினார். அவர் 69 பந்தில் 8 பவுண்டரியுடன் அரை சதத்தை தொட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago