கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வழிகாட்டியாக காலிஸ் நியமனம்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த காலிஸ் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் பேட்டிங்கில் சோபிக்காத அவரை, அந்த அணி வழிகாட்டி மற்றும் பேட்டிங் ஆலோசகராக வைக்க முடிவு செய்துள்ளது. ஆகவே, காலிஸ் இனிமேல் ஐ.பி.எல். போட்டியில் பேட்டிங் செய்யமாட்டார்.

கொல்கத்தா அணி, கடந்த 2011-ம் ஆண்டு 1.1 மில்லியன் டாலருக்கு காலிசை ஏலத்தில் எடுத்தது. பின்னர், மறு ஏலத்தில் 9,16,000 டாலருக்கு மீண்டும் ஏலம் எடுத்தது. 2011-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடியவர் காலிஸ். அந்த சீசனில் அதிகம் ரன் அடித்தவர் அவர்தான். 2012-ம் ஆண்டு கொல்கத்தா அணி ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், 2014-ம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் 16 போட்டிகளில் 8 போட்டிகளில் மட்டுமே களம் இறக்கப்பட்டார்.

அதில் ஒரு அரை சதத்துடன் 151 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால், அவரை களம் இறக்க கொல்கத்தா அணி விரும்பவில்லை. ஆனால், சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதால் அவரை விடுவிக்க மனமில்லாமல், அணியின் வழிகாட்டி மற்றும் பேட்டிங் ஆலோசகராக நியமித்துள்ளது கொல்கத்தா அணி.
39 வயதாகும் தென்ஆப்பிரிக்காவின் ஆல் ரவுண்டரான காலிஸ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், கடந்த ஜூலை மாதம் அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago