இதைத்தொடர்ந்து பறவை காய்ச்சல் பரவுதை தடுக்க கேரள அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.இது தொடர்பாக முதல்–மந்திரி உம்மன்சாண்டி தலைமையில் நேற்று அவசர ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.முதல் கட்டமாக பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்திற்கு மேற்பட்ட வாத்துக்களை உடனடியாக கொல்ல முடிவு எடுக்கப்பட்டது. வாத்து வளர்ப்போருக்கு இதற்காக நஷ்டஈடு தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதே சமயம் வாத்துக்களை கொல்ல வாத்து வளர்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இன்று இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கேரள சுகாதார மந்திரி கூறியுள்ளார். மேலும் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வாத்துக்கறி மற்றும் முட்டைகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இறந்த வாத்துக்களை உடனடியாக எரித்து அழிக்கவும், பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கோட்டயம் குமாரகத்தில் உள்ள கோழி பண்ணைகளில் உள்ள கோழிகளுக்கும் பறவை காய்ச்சல் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பறவைகள் சரணாலயம் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. திருவனந்தபுரம், திருச்சூர் போன்ற இடங்களில் செயல்படும் மிருக காட்சி சாலைகளில் விலங்குகளுக்கு கோழி இறைச்சி உணவு வழங்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்றும் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே