கேள்வி:– தயாரிப்பாளர் வருண் மணியனுடன் உங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வதந்தி பரவி உள்ளதே? இது உண்மையா?
பதில்:– இல்லை எனக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. நிச்சயதார்த்தத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. திடீர் என்று நிச்சயதார்த்தம் செய்து கொள்ள மாட்டேன். நான் சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். நிச்சயதார்த்தம் என்று ஒன்று நடந்தால் அதுபற்றி என்னுடன் நடிக்கும் நடிகர்கள் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் போன்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பு எனக்கு இருக்கிறது. ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நிச்சயதார்த்தம் என்பது சந்தோஷமான நிகழ்ச்சி. அதை மறைக்க தேவை இல்லை.
கே:– வருண்மணியன் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் அதை நீங்கள் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறதே?
ப:– வருண்மணியனை எனக்கு நன்றாக தெரியும். அவர் எனது நண்பர். ஆனால் திருமணம் பற்றியெல்லாம் இப்போது எதுவும் சொல்ல முடியாது. வருண்மணியனுக்கு குடும்பம் இருக்கிறது. எனவே மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. உங்கள் நண்பருடன் சேர்ந்து படம் எடுப்பதால் அவருடன் நிச்சயதார்த்தம் நடக்கும் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
கே:– நீங்கள் ராணாவை காதலித்ததாகவும் அந்த காதல் தற்போது முறிந்து விட்டதாகவும் கூறப்படுகிறதே?
ப:– ராணாவை விரும்புவதாக எப்போதுமே நான் சொன்னது இல்லை. அப்புறம் எப்படி பிரிந்து விட்டேன் என்று சொல்லப்படுவதற்கு நான் பதில் கூற முடியும்?
கே:– திருமணம் பற்றி உங்கள் திட்டம் என்ன?
ப:– நான் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். ஒருத்தரை பார்த்ததும் அவரை மணந்து கொள்ளும்படி இதயமும் மனமும் சொல்ல வேண்டும். அப்படி இரண்டும் சொல்வதாக உணரும் போது திருமணம் செய்து கொள்வேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே