இந்நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அவருக்காக குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி சர்பானந்தா சோனோவலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- சரிதாதேவி விவகாரத்தை உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி உங்களை (சர்பானந்தா) கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு அரசாங்கம் முழுமையாக ஆதரவு அளித்து, அவரது குத்துச்சண்டை வாழ்க்கை உரிய காலத்திற்கு முன்பாக முடிந்து விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு விளையாட்டு வீரர் என்ற முறையில், உணர்ச்சியின் வேகத்தில் துரதிர்ஷ்டவசமாக அவர் அவ்வாறு நடந்து கொண்டு விட்டார் என்பதை அறிவேன். அதற்காக அவர் வருத்தம் தெரிவித்து விட்டார். எனவே தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இன்னொரு வாய்ப்பை பெற அவர் தகுதியானவர்.
தனது ஒழுங்கீனத்திற்காக அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்டு இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். எனவே சரிதாதேவியை மன்னித்து, அவர் குத்துச்சண்டையில் தொடர்ந்து மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்துவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்த எல்லா விதமான முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.அது மட்டுமின்றி இந்த பிரச்சினையை கவனிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய குத்துச்சண்டை சங்கத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகளை கொண்டு ஒரு குழுவை உருவாக்க வேண்டும். சரிதாதேவி தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து அவருக்காக சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திடம் இந்த குழு வாதிட வேண்டும். இவ்வாறு தெண்டுல்கர் அதில் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே