சிக்மகளூர் திப்புநகரை சேர்ந்தவர் இலஞ்சியம்மா(வயது 65). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு சொந்தமாக நிலமோ, வீடோ இல்லை. இதனால் அரசு சார்பில் எனக்கு நிலம் ஒதுக்கி அதில் மானிய விலையில் வீடு கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை சிக்மகளூர் நகரசபை அதிகாரியிடம் கொடுத்தார்.இதைத்தொடர்ந்து, நகரசபை அதிகாரிகள் சிக்மகளூர் இந்திராநகர் பகுதியில் அரசு சார்பில் வீடு கட்ட தேவையான நிலத்தை இலஞ்சியம்மாவுக்கு ஒதுக்கி கொடுத்தனர். அந்த நிலத்தில் வீடு கட்ட ஆகும் செலவில் 50 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கும் என்றும், மீதி 50 சதவீத பணத்தை இலஞ்சியம்மா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது இலஞ்சியம்மாவிடம் போதிய அளவில் பணம் இல்லாததால், வீடு கட்டும் பணியை உடனே தொடங்காமல் கிடப்பில் போட்டார். வீடு கட்டுவதற்கு தேவையான பணத்தை ஏற்பாடு செய்து விட்டு, பணியை தொடங்குவது என்று முடிவு செய்தார்.இந்நிலையில், போதிய பணத்தை ஏற்பாடு செய்த இலஞ்சியம்மா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகரசபை சார்பில் இந்திராநகரில் தனக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை பார்க்க சென்றார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அந்த நிலத்தில் இன்னொருவர் வீடு கட்டி இருந்தார்.இதுகுறித்து இலஞ்சியம்மா திப்பு நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பு இளைஞர் அணியினரிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் உதவியுடன் நகரசபை அதிகாரியிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், எனது நிலத்தை காணவில்லை. அதை விரைவில் கண்டுபிடித்து தர வேண்டும் என்று இலஞ்சியம்மா கோரிக்கை விடுத்து உள்ளார். அதுகுறித்து நகரசபை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே