டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மேத்யூஸ் 92 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் சங்ககாரா 61 ரன்களும், தில்சான் 35 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 275 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ரகானே 8 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், அடுத்து இணைந்த ஷிகர் தவான், அம்பதி ராயுடு இருவரும் இலங்கை பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஸ்கோரை உயர்த்தினர். அபாரமாக விளையாடிய தவான், 79 ரன்கள் எடுத்தபோது விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் விராட் கோலியுடன் இணைந்து அதிரடியை தொடர்ந்த ராயுடு சதம் அடித்தார்.
101 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டிய அவர், தொடர்ந்து இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். மறுமுனையில் விராட் கோலியும் தனது பங்கிற்கு 44 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 14 ரன்களில் வெளியேறினார்.45-வது ஓவரில் ராயுடு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். 33 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்கள் எடுத்தது. இதனால், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராயுடு 121 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே