கடந்த 1ம் தேதி முதல் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினர் 9 பேர் உள்பட 80-க்கும் அதிகமான பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.நேற்று முன்தினம் இரவும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்ந்தது. ஜம்மு, சம்பா, கதுவா மாவட்டங்களில் எல்லையோரத்தில் உள்ள இந்திய பாதுகாப்பு நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக பீரங்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர்.பாகிஸ்தான் ராணுவத்தின் அடாவடித்தனத்தால் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. கிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் பற்றி நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மராட்டிய மாநிலம் மகாட் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
அதற்கு, பாரமதி என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில் பிரதமர் மோடி பதில் அளித்தார். முக்கியமான பிரச்சினையில் காங்கிரசும் எதிர்க்கட்சிகளும் அருவருப்பான அரசியல் நடத்துகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார். அத்துடன் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.அவர் பேசுகையில் கூறியதாவது:-எல்லையில் இப்போது துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன. நமது எதிரிகள் அலறிக்கொண்டு ஓடுகிறார்கள். வம்புச்சண்டைக்கு வந்தவர்களுக்கு நமது ராணுவ வீரர்கள் தைரியத்துடன் தக்க பதிலடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.காலம் மாறிவிட்டது என்பதை நமது எதிரி (பாகிஸ்தான்) புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய முந்தைய பழக்கங்களை இனிமேலும் சகித்துக்கொள்ள முடியாது. பாகிஸ்தானின் அடாவடித்தனம் நீடித்தால், அந்த நாடு தாங்கிக் கொள்ள முடியாத விலை கொடுக்க நேரிடும்தேர்தல்கள் வரும், போகும். அரசாங்கங்கள் வரும், போகும். ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற பிரச்சினைகளை அரசியல் ஆக்கி விவாதித்து எல்லையில் போரிட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் மனஉறுதியை தயவு செய்து குலைத்து விடாதீர்கள்.எனது நோக்கம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். அதை நான் வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டிய தேவை இல்லை. ராணுவ வீரர்கள் தங்கள் வழியில் துப்பாக்கியின் விசையில் கைவைத்து பேசுகிறார்கள். அதே வழியில் அவர்கள் தொடந்து பேசுவார்கள். எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.சரத்பவார் ராணுவ மந்திரியாக இருந்த போதும் பாகிஸ்தான், சீனாவுடன் எல்லையில் பிரச்சினை இருந்தது. அப்போது எல்லைக்கு போக வேண்டும் என்று அவர் எப்போதாவது கவலைப்பட்டது உண்டா? தேச பக்தி பிரச்சினையில் நாம் அரசியல் செய்ய வேண்டாம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று கூறுகையில், பாகிஸ்தானின் தாக்குதலுக்கு ராணுவத்தினரும், எல்லை பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி எல்லைப்பகுதி நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்தார். யாருக்கும் இந்தியா பணிந்துவிடாது என்றும், தேசத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், தாக்குதல் நீடித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று ராணுவ மந்திரி அருண் ஜெட்லியும் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியை விட சர்வதேச எல்லைப்பகுதியிலேயே அதிக அளவில் தாக்குதல் நடத்துகிறது. பொறுப்புள்ள நாடான இந்தியா ஒரு போதும் வம்பு சண்டைக்கு போனது இல்லை.அதேசமயம், தேசத்தின் மண்ணையும், மக்களையும் பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் ராணுவத்தினரும் எல்லை பாதுகாப்பு படையினரும், அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் தாக்குதலுக்கு உடனுக்குடன் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.பாகிஸ்தான் ராணுவம் வேண்டுமென்றே ஆக்கிரமிப்பு போக்குடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியா பொறுமையுடன் நடந்து கொள்வதன் காரணத்தை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் அதற்கு தாங்கிக்கொள்ள முடியாத விலையை பாகிஸ்தான் கொடுக்க வேண்டி இருக்கும்.தாக்குதல் நீடித்தால் எல்லைப்பகுதியில் எப்படி அமைதி நிலவும்? இந்தியாவுடன் அமைதியை விரும்பினால் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடுவதையும், குண்டுகள் வீசி தாக்குதல் நடத்துவதையும் பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா? என்று கேட்டதற்கு, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போது எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே