219 ரன்கள் முன்னிலை என்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான துவக்கத்தை தந்தனர். ஜான்சன் 41 ரன்களும், பிராத்வெய்ட் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நேற்று மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் சந்தர்பால் 63 ரன்களுடனும், பிளாக்வுட் 43 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.இன்று மீண்டும் தங்கள் ஆட்டத்தை இருவரும் தொடர்ந்து விளையாடினர். சிறப்பாக விளையாடிய சந்தர்பால் சதம் அடித்தார். பிளாக்வுட்டும் தன் பங்குக்கு 66 ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சில் மேற்கொண்டு விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் 269 ரன்களை எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.பின்னர் வெற்றிக்கு 489 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச வீரர்களின் தொடக்கம் நன்றாக இருந்தது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தமீம் இக்பால், ஷம்சுர் ரஹ்மான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களை சேர்த்திருந்தபோது ஷம்சுர் 39 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷம்சுர் 27 பந்தில் 39 ரன்களை குவித்தார்.
அடுத்து களமிறங்கிய அனாமுல் வந்த வேகத்திலேயே டக் அவுட்டாகி வாத்து நடை நடந்தார். பின்னர் மோமினுல் ஹக், தமீமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இவர்களை அவுட்டாக்க முடியாமல் அவதிப்பட்டனர். பொறுமையுடன் விளையாடிக் கொண்டிருந்த தமீம் 64 ரன்கள் எடுத்திருந்தபோது பென் பந்துவீச்சில் ஆட்டமிழக்க வங்கதேச அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிய ஆரம்பித்தன.முதல் இன்னிங்சில் கலக்கிய மகமதுல்லா இரண்டாவது இன்னிங்சில் 0 ரன்னில் அவுட்டாகி வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களை கலங்கடித்தார். சிறிது நேரத்தில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்த மோமினுல்லும் 56 ரன்கள் குவித்திருந்த நிலையில் பென் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்திருந்த வங்கதேச அணி பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் மேற்கொண்டு 32 மட்டுமே சேர்த்து எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து இறுதியில் 192 ரன்னில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான பென்ஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதனால் 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணியின் சந்தர்பால் ஆட்டநாயகனாகவும், பிராத்வெயிட் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே