சென்னை அணி பேட்டிங்கில் வலுவானது. தொடக்க ஆட்டக்காரர்கள் வெய்ன் சுமித்தும், பிரன்டன் மெக்கல்லமும் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். காயத்தில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ள வெய்ன் பிராவோ, ரெய்னா, கேப்டன் டோனி, டு பிளிஸ்சிஸ் என்று பெரிய பேட்டிங் பட்டாளமே அணிவகுத்து நிற்கிறது. சென்னை அணிக்கு எப்போதும் வேகப்பந்து வீச்சு தான் பலவீனம். ஐ.பி.எல்.-ல் பஞ்சாப்புக்கு எதிராக மூன்று முறை 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்ததே அதற்கு உதாரணம். அவற்றை சரி செய்து விட்டால், கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு சுலபமாகும்.இரண்டு முறை ஐ.பி.எல். பட்டத்தை வென்றுள்ள கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன்ஸ் லீக்கில் இதற்கு முன்பு ஆடிய இரண்டு முறையும் (2011, 2012) லீக் சுற்றை தாண்டியதில்லை.பலம் பொருந்திய அணியாக காணப்பட்ட கொல்கத்தா அணியில் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல், ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் விலகியது நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனாலும் 7-வது ஐ.பி.எல்.-ல் 660 ரன்கள் குவித்த ராபின் உத்தப்பா, சிக்கனமாக பந்து வீசுவதில் சாமர்த்தியசாலியான சுழல் சூறாவளி சுனில் நரின், அதிரடி மன்னன் யூசுப் பதான் ஆகியோர் அந்த அணியின் பிரதான அஸ்திரங்களாக இருக்கிறார்கள்.
இவ்விரு அணிகளும் சாம்பியன்ஸ் லீக்கில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆட்டம் மழையால் பாதிக்க சிறிது வாய்ப்புள்ளது. இங்கு இன்று மழை பெய்ய 30 சதவீதம் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே