இந்நிலையில் இந்த நோயைக் கட்டுப்படுத்த உதவும்விதமாக தங்கள் நாட்டிலிருந்து 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்பி அங்கு உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த பெரிய பயிற்சித் திட்டங்களை நிறைவேற்றும் ஒரு அறிவிப்பினை இன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.அட்லாண்டாவில் உள்ள நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்குப் பயணம் செய்து அங்குள்ள சுகாதாரத் தலைமை அதிகாரிகளை சந்தித்தபின்னர் இந்த அறிவிப்பினை அவர் வெளியிடுவார் என்று வெள்ளை மாளிகை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எபோலா நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள லைபீரியாவில் இவர்களுடைய பெரும்பாலான சேவைகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. லைபீரியாவின் தலைநகரான மொன்ரோவியாவில் இதற்கென ஒரு தலைமையகம் திறக்கப்பட்டு அந்த அலுவலகம் அமெரிக்க ராணுவம் மற்றும் சர்வதேச நிவாரணத் திட்டங்களை ஒருங்கிணைக்கும் ஒரு பிராந்திய மையமாகச் செயல்படும். இந்த ராணுவ வீரர்கள் ஒரு நிலையான தளமாகச் செயல்பட்டு நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும், பயிற்சியாளர்களையும் விரைந்து அனுப்புவர் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.
லைபீரியாவின் நலிவடைந்துள்ள சுகாதார உட்கட்டமைப்பை மேம்படுத்தும் விதமாக அமெரிக்க மையம் அங்கு வாரத்திற்கு 500 சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கும்.ஏற்கனவே அங்கு நிறுவப்பட்டுள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எபோலா பாதிப்பு கொண்ட சுகாதார ஊழியர்களை நிர்வகிக்க 65 பேர் கொண்ட பொது சுகாதார சேவைக் குழு ஒன்றையும் அனுப்பும்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்துடன் இணைந்து அந்நாடுகளுக்குத் தேவைப்படும் எபோலா நோய் தடுப்புக் கருவிகளை அனுப்புவதுடன் அம்மக்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் இந்த அதிகாரிகள் வழங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வேகமாகப் பரவி வரும் இந்த நோயை எதிர்கொள்வதில் நாம் பங்கு பெறுவதுடன் சர்வதேச பொறுப்புகளிலும் முன்னணியில் இருக்கவேண்டும் என்று மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே