இந்தியாவின் கடல் பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக, நீரிலும், நிலத்திலும் இயங்கக்கூடிய அதிநவீன “யு.எஸ். 2′ விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்பங்களை வழங்க ஜப்பான் சம்மதம் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படை வளர்ச்சிக்கு அதிநவீன “யு.எஸ். 2′ விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்பம் மற்றும் விமானங்களை அந்நாட்டிற்கு வழங்க தேவையான விவாதங்கள் மற்றும் ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு கூட்டு செயற்குழுவுக்கு இருதரப்பும் உத்தரவிட்டுள்ளது. என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார். இவ்வகை விமானங்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்று மோடி அரசு கொள்கை கொண்டுள்ளது. இரண்டாவது உலகப்போர் முடிந்து 70 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் தற்போது ஜப்பான் ராணுவ உபகரணங்களை விற்க முன்வந்துள்ளது.போரில் தோல்வியை தொடர்ந்து, இதுவரையில் ராணுவ ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய ஜப்பான் தடை விதித்து இருந்தது. இந்த உடன்பாடு இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒரு நெருக்கமான உறவுக்கான அறிகுறியாகும்.
நான்கு இயந்திரங்கள் கொண்ட “யு.எஸ். 2′ விமானங்கள் இந்திய கடற்படையின் சக்தியை பெருக்கும். கடலில் விமானதளத்துடன் கூடிய கப்பல்கள் இல்லாமல் இத்தகைய விமானங்களால் தரையிறங்க முடியும். எனவே ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட பகுதியில் கப்பலின் உதவியின்றி உடனடியாக தரையிறங்க முடியும். பல்வேறு தீவு பகுதிகளை கொண்டுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபர், லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் இத்தகைய விமானங்கள் பெரும் பயனை அளிக்கும்.பரந்த கடல் எல்லையை கொண்டுள்ள இந்தியாவிற்கு இந்தகைய விமானங்கள் பாதுகாப்பு பணிக்கு பெரும் வரபிரசாதமாக அமையும். ஏற்கனவே இந்திய அரசு இதுபோன்ற 15 கடல் விமானங்களை வாங்க திட்டமிட்டு இருந்தது. நிதி பற்றக்குறை, ஹெலிகாப்டர்கள், டார்பிடோக்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் கப்பல்கள் போன்ற பிற மிகவும் இன்றியமையாத தேவைகள் காரமாண இந்த திட்டம் பின்தங்கியது. இத்தகைய விமானங்கள் உயர் ஆழம் கொண்ட கடல், ஆறுகள் மற்றும் ஏரிகளிலும், தரையிரங்க வல்லது. விமானத்தினால் 30 ராணுவ வீரர்கள் மற்றும் 12 டன் பாரத்தை ஏற்றிசெல்ல கூடியது. விமானத்தால் 4500 கிலோ மீட்டர் தூரம் வரையில் பறக்க முடியும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே