கடந்த 2 டெஸ்டிலும் ஏற்பட்ட மாற்றத்தில் பலன் இல்லாததால் நாளை டெஸ்டில் டோனி மாற்றம் செய்வாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.தவான், ரோகித்சர்மா அல்லது ஸ்டுவர்ட் பின்னி ஆகியோர் கடைசி டெஸ்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2 டெஸ்டில் காயத்தால் விளையாடாத இஷாந்த்சர்மா நாளைய டெஸ்டில் இடம் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.நேற்றைய பயிற்சியில் அவர் பங்கேற்றார். உடல் தகுதியை பொறுத்து அவரது தேர்வு இருக்கும்.இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான வீராட் கோலியின் ஆட்டம் இந்த டெஸ்டில் மிகவும் மோசமாக உள்ளது. 4 டெஸ்டில் 108 ரன்களே (8 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார். சராசரி 13.50 ஆகும். ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.இதேபோல புஜாரா 8 இன்னிங்சில் 207 ரன்களே எடுத்துள்ளார். சராசரி 25.7 ஆகும். இந்த இருவரும் நிலைத்து நின்று ஆடுவது அவசியமாகும்.
தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய முரளிவிஜய், ரகானே கடந்த 2 டெஸ்டில் ஏமாற்றம் அளித்தனர். இதனால் அவர்களும் சிறப்பாக ஆடினால் தான் முன்னேற்றம் காண முடியும்.முன்னணி பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே தோல்வியை தவிர்க்க முடியும். இங்கிலாந்தை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் ஒன்றுபட்டு விளையாட வேண்டும்.இங்கிலாந்து அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. ‘டிரா’ செய்தாலே அந்த அணி தொடரை கைப்பற்றிவிடும். ஆனால் இங்கிலாந்தோ 3–1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.அந்த அணியின் பவுலர்களான ஆண்டர்சன், மொய்ன் அலி, ஸ்டூவர்ட் பிராட் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக உள்ளனர்.நாளைய டெஸ்ட் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே