தொழிலுக்கு என்றும் துரோகம் செய்யாத இளையராஜா…!

சுப்ரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கும் புதிய படம் ‘மேகா’. இப்படத்தில் அஷ்வின் நாயகனாகவும், ஸ்ருஷ்டி நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆல்பர்ட் தயாரித்துள்ள இப்படத்தை ஜெ.எஸ்.கே நிறுவனம் வெளியிடவுள்ளது.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் கார்த்திக் ரிஷி, நடிகர் அஷ்வின், நடிகை ஸ்ருஷ்டி, இசையமைப்பாள இளையராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது இளையராஜா பேசும்போது, படத்தின் தயாரிப்பாளர் ஆல்பர்ட்டை வெகுவாக பாராட்டினார். மேலும், படத்தை சிறப்பாக இயக்கியிருப்பதாக கார்த்திக் ரிஷிக்கும் தனது ஆசீர்வாதத்தை அளிப்பதாக கூறினார்.

தனது இசைப் பயணத்தின் அனுபவங்கள் பற்றி குறிப்பிட்ட இளையராஜா, மோசமான படங்களாக இருந்தாலும், தனக்கு பிடிக்காத படங்களாக இருந்தாலும், சரஸ்வதி தேவி தனக்குகொடுத்த இசையை சிறப்பாக அளித்து வருவதாகவும், தொழிலுக்கு என்றும் துரோகம் செய்யமாட்டேன் என்றும் கூறினார். அத்துடன், கார்த்திக் ரிஷியை பாராட்டிய இளையராஜா, இப்படம் வெற்றியடைய ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago