இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: இந்தியா படுதோல்வி!…

சவுத்ஆம்ப்டன்:-இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுத்ஆம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 569 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இயன் பெல் 167 ரன்களும், பேலன்ஸ் 156 ரன்களும் விளாசினர். கேப்டன் குக் 95 ரன்கள், பட்டர் 85 ரன்கள் எடுத்தனர்.இதையடுத்து தடுமாற்றத்துடன் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு முன்னணி வீரர்களின் பேட்டிங் கைகொடுக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ரகானே (54), டோனி (50), கோலி(39), விஜய் (35) போன்றவர்கள் ஓரளவு ரன் குவித்த போதும் பாலோ ஆனை தவிர்க்க முடியவில்லை.

330 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் அதிக ரன்கள் இலக்கு நிர்ணயிக்க முடிவு செய்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை ஆடியது. துவக்க வீரர் ராப்சன் 13 ரன்களில் வெளியேறினார். கேப்டன் குக் இந்த இன்னிங்சிலும் அபாரமாக ஆடி 70 ரன்கள் விளாசினார். பேலன்ஸ் 38 ரன்களிலும் ரூட் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 445 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.நான்காம் நாளான நேற்று ஆட்டநேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் விஜய் 12 ரன்களும், தவான் 37 ரன்களும், புஜாரா 2 ரன்களும், கோலி 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, ரகானே 18 ரன்களுடனும், ரோகித் சர்மா 6 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.

கடைசி நாளான இன்று தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரோகித் சர்மா மேற்கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் 6 ரன்னிலேயே நடையை கட்டினார். கேப்டன் டோனி தனது வழக்கமான ஸ்ட்ரோக்கில் 6 ரன்களுக்கு கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த ஜடேஜா 15 ரன்களிலும், புவனேஸ்வர் குமார் மற்றும் சமி ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும், பங்கஜ் சிங் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 266 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.நேற்றைய ஆட்ட நேர இறுதியில் 18 ரன்களுடன் களத்தில் இருந்த ரகானே கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் 50 ரன்களை கடந்த ஒரே வீரர் ரகானே மட்டுமே. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மோயின் அலி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதுவரை நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. 4-வது போட்டி மான்செஸ்டரில் வரும் 7-ம் தேதி தொடங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago