கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில்!…

தஞ்சாவூர்:-கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என்று தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகம்மது அலி அறிவித்தார். அதன்படி இன்று மதியம் 12 மணிக்கு அவர் தீர்ப்பை வெளியிட்டார்.அப்போது குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.விடுதலையானவர்களில் 8 பேர் அதிகாரிகள், 3 பேர் ஆசிரியைகள். அவர்கள் விவரம் வருமாறு:–

1. பழனிச்சாமி (மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்). 2. நாராயணசாமி (மாவட்ட கல்வி அலு வலர்) 3. ராதாகிருஷ்ணன் (மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்) 4. பாலகிருஷ்ணன் (உதவி தொடக்க கல்வி அலுவலர்) 5. மாதவன் (உதவி தொடக்க கல்வி அலுவலர்) 6. பாலசுப்பிரமணியன் (உதவி தொடக்க கல்வி அலுவலர்) 7. தேவி (ஆசிரியை). 8. மகாலட்சுமி (ஆசிரியை). 9.அந்தோணியம்மாள் (ஆசிரியை).10.சத்தியமூர்த்தி (நக ராட்சி ஆணையர்), 11.முருகன் (கும்பகோணம் நகரமைப்பு அலுவலர்)

கும்பகோணம் தீ விபத்து வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:–

1.பள்ளியின் நிறுவனர் பழனிசாமி 2.பள்ளி தாளாளர் சரஸ்வதி 3.தலைமை ஆசிரியை சந்தானலெட்சுமி 4.சத்துணவு அமைப் பாளர் விஜயலட்சுமி 5.சமையல்காரர் வசந்தி 6.என்ஜினீயர் ஜெயச் சந்திரன் 7.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி 8. மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம். 9. மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கண் காணிப்பாளர் தாண்டவன். 10.மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி குற்ற விவரத்தை கூறினார். அப்போது நாங்கள் தவறு செய்யவில்லை, எந்த குற்றமும் செய்யவில்லை என்றனர்.

அவர்களுக்கான தண்டனை விபரம் மதியம் 1.15 மணிக்கு வெளியிடப்பட்டது.

பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, அவரது மனைவியும், பள்ளி தாளாளருமான சரஸ்வதி உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.மீதம் உள்ள 5 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago