அபாரமாக ஆடிய ஜடேஜா, டெஸ்ட் அரங்கில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். எட்டாவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்த போது, ஸ்டோக்ஸ் ‘வேகத்தில்’ ஜடேஜா (68) பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த முகமது ஷமி (0), மொயீன் அலியிடம் சரணடைந்தார்.மறுமுனையில் அசத்திய புவனேஷ்வர் குமார், ஸ்டோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, டெஸ்ட் அரங்கில் தனது 3வது அரைசதம் அடித்தார். இவர், 52 ரன்கள் எடுத்த போது ஸ்டோக்ஸ் பந்தில் அவுட்டானார். இரண்டாவது இன்னிங்சில், இந்திய அணி 342 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 318 ரன்கள் முன்னிலை பெற்றது.வெற்றிக்கு 319 ரன்கள் என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் ராப்சனும், குக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க திணறிய ராப்சன் 7 ரன்னில் ஜடேஜாவின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஜடோஜா வீசிய முதல் பந்திலேயே ராப்சன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் பேலன்ஸ் குக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி வந்தனர். நன்றாக விளையாடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை வேகப்பந்து வீச்சாளரான ஷமி பிரித்தார். 27 ரன்களில் பேலன்ஸ் ஆவுட்டாக, அடுத்து களமிறங்கிய பெல்லும் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் 1 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார். சிறிது நேரத்தில் குக்கையும் 22 ரன்களில் அவுட்டாக்கி இஷாந்த் அந்த அணிக்கு மேலும் அதிர்ச்சி அளித்தார்.பின்னர் ரூட்டும், அலியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரன் குவிப்பதில் அவசரம் காட்டாமல் ஒன்றிரண்டாக ரண்களை சேர்த்துவந்தனர். இன்றைய ஆட்ட நேர இறுதியில் ரூட் 14 ரன்களுடனும், அலி 15 ரன்களுடனும் களத்திலிருந்தனர். ஒரு கட்டத்தில் ஜடேஜா வீசிய பந்து நன்றாக ஸ்விங்காகி அலியின் பேடில் பட்டது. ஜடேஜா எல்.பி.டபிள்யூ அவுட் கேட்க நடுவர் தர்மசேனா அவுட் கொடுக்கவில்லை.ஆனால் நடுவர் தர்மசேனா அவுட் கொடுக்கவில்லை. இதனால் அலி தப்பிப்பிழைத்தார். இறுதியில் இன்றைய ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 214 ரன்கள் தேவை என்ற நிலையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தும் வாயப்பு இந்திய அணிக்கு மிகப் பிரகாசமாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே