சென்னை:-பிரபு சாலமன் இயக்கும் கயல் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் ஆனந்தி. சில தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவருக்கு பிரபுசாலமன் படத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்புகூட முழுமையாக முடிந்திராத நிலையில் அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் தானுகுமார் இயக்கும் பொறியாளன் படத்தில் ஹரிஸ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். அடுத்து தற்போது இயக்குனர் பாலா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அதர்வாவுடன் நடிக்கிறார். இதனை சற்குணம் இயக்குகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். கோலிசோடா அருணகிரி இசை அமைக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி