அரை இறுதியில் தோற்ற பிரேசில், நெதர்லாந்து அணிகள் 3–வது இடத்துக்கான போட்டியில் நாளை மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது.போட்டியை நடத்தும் பிரேசில் அரை இறுதியில் ஜெர்மனியிடம் படுதோல்வி அடைந்ததை அந்நாட்டு ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் வென்று 3–வது இடத்தை பிடிக்க அந்த அணி முயற்சிக்கும்.
அந்த அணி நட்சத்திர வீரர் நெய்மர் காயம் காரணமாக விலகியது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அவரது இடத்தை நிரப்ப முடிய வில்லை. கடந்த அரை இறுதியில் விளையாடாத கேப்டன் சில்லா நாளைய ஆட்டத்தில் களம் இறங்குகிறார். இதனால் பிரேசில் அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும். இருந்தபோதிலும் நெதர்லாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியமாகும்.
நெதர்லாந்து அணி அரை இறுதியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக போராடியே தோற்றது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் உள்ளது.நெதர்லாந்து அணியில் கேப்டன் வான்பெர்சி, ரோபன் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். மேலும் அந்த அணியின் தாக்குதல் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது.முன்களத்தில் வீரர்களை ஊடுருவி பந்தை அருமையாக கடத்தி செல்கிறார்கள். இதனால் அந்த அணியின் தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்க பிரேசில் அணி கடுமையாக பேராட வேண்டியதிருக்கும்.கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி தோற்ற நெதர்லாந்து அணி இம்முறை அரை இறுதியில் தோற்றது. இதனால் எப்படியாவது 3–வது இடத்தை தனதாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது.3 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நெதர்லாந்து தோல்வியே சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே