பாராளுமன்றத்தில் தூங்கினாரா ராகுல் காந்தி?…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் நேற்று விலைவாசி உயர்வு பற்றிய சூடான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கண்களை மூடி, தலையை வலதுபுறமாக தொங்க விட்டு தூங்கிக்கொண்டிருந்தது போன்று காட்சி அளித்தார். அந்த காட்சி பாராளுமன்ற டி.வி. ஒளிபரப்பில் இடம் பெற்றது. இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ராகுல் தூங்கவில்லை என்று காங்கிரஸ் மறுத்தது. இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, இது உண்மை அல்ல. அனைத்து அவதூறுகளையும் ஒட்டுமொத்தமாக மறுக்கிறேன். கடந்த 7 வாரங்களாக இந்த அரசு அற்பத்தனமான, பழிவாங்கும் அரசியலில்தான் ஈடுபட்டு வருகிறது என கூறினார்.
அதே நேரத்தில் பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன், விலைவாசி உயர்வு பிரச்சினையில், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு தூங்கிக்கொண்டிருந்தது.

பாராளுமன்றத்தில் இது குறித்த விவாதம் நடக்கும்போது காங்கிரஸ் கட்சியின் இளவரசர் தூங்கிவிட்டார். விலைவாசி உயர்வு, பணவீக்கம் பற்றி விவாதிக்க காங்கிரஸ் தயார் இல்லை. கோஷத்துக்காக இந்த வார்த்தைகளை முழங்குகின்றனர் என குற்றம் சாட்டினார்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா, அற்பத்தனமான காரியம் பெரிதுபடுத்தப்பட்டுவிட்டது. இது சர்ச்சைக்குரியது அல்ல என கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago