பிரிந்து போன காதலியை அடைய ரூ.24 லட்சத்திற்கு சினிமா டிக்கெட் வாங்கிய காதலன்!…

சீனா:-சீனாவை சேர்ந்த ஹூஜியாயுன் என்ற இளைஞர் கடந்த 2007ம் ஆண்டில் இளம்பெண் ஒருவரை காதலித்தார். அப்போது காதலர்கள் இருவரும் சினிமாவுக்கு செல்ல விரும்பினர். ஆனால் ஹூ ஜியாயுனின் ஏழ்மையால், சினிமாவுக்கு 2 டிக்கெட் வாங்குவதற்கு கூட அவரால் முடியவில்லை.

இதனால் அவரது காதலி, நீ வாழ்நாள் எல்லாம் ஏழையாகத்தான் இருப்பாய் என்று கூறிவிட்டு அவரை விட்டு பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்த ஹூ ஜியாயுன், கடந்த 7 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து பணக்காரனாக உயர்ந்து விட்டார். இதை அவரது காதலிக்கு உணர்த்த விரும்பிய அவர், சினிமாவையே கையில் எடுத்தார்.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’டிரான்ஸ்பார்மர்ஸ்’ சினிமாவுக்கு, பீஜிங்கில் உள்ள 4 ஐமேக்ஸ் தியேட்டர்களின் முதல் நாள் காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கிவிட்டார்.

இதற்கு 40 ஆயிரம் டாலர் செலவானது. இந்த தொகையும், அவரது மாத வருமானத்தில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது.இதை தனது டுவிட்டர் இணையதளம் மூலமாக தெரிவித்துள்ள அவர், இதை தனது காதலி பார்க்கும் வரை மீண்டும் மீண்டும் வெளியிடுமாறு இணையதள பயன்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago