இந்த தாக்குதலை முறியடிக்கும் வகையில் ஈராக்குக்கு ராணுவ உதவி வழங்க தயாராக இருப்பதாக இதுவரை பகை நாடாக இருந்த ஈரான் அறிவித்துள்ளது. இந்நிலையில், போராளிகளை ஒடுக்கி, அழிக்க அமெரிக்க விமானப்படையின் உதவியை ஈராக் அரசு கோரியது.ஈராக்குக்கு அமெரிக்க விமானப்படை அனுப்பப்படுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க கூட்டுப் படையின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்ப்ஸி, நேரடியாக பதில் அளிக்காமல், ‘இசில்’ போராளிகளை எங்கே பார்த்தாலும் அவர்களை அழிக்க வேண்டியது நமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பானது என்று சூசகமாக கூறியிருந்தார்.எனவே, ஈராக்குக்கு அமெரிக்க விமானப் படைகள் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 300 ராணுவ ஆலோசகர்களை ஈராக்குக்கு அனுப்ப தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
ஈராக்கில் இலக்கிடப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ள ஒபாமா, ஈராக்கில் நடைபெற்று வரும் போராட்டத்தையும், தலைநகர் பாக்தாத்துக்கு இருக்கும் அச்சுறுத்தலையும் அமெரிக்க உளவுப்பிரிவு மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.எனினும், போரை ஒடுக்க அமெரிக்கப் படைகளை மீண்டும் ஈராக்குக்கு அனுப்பும் திட்டம் ஏதுமில்லை என்றும் ஒபாமா அறிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே