இவர் மலையாள டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை சுவாதியும் ஷாபின் என்பவரும் காதலித்து வந்தனர். ஷாபின் தங்கள் அளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் நடிகை இனியாவின் பெற்றோர் இந்த காதலை ஏற்கவில்லை.ஆனால் ஷாபினைதான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக சுவாதி இருந்ததால் கடந்த 29ம் தேதி நடிகை சுவாதி–ஷாபின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்த புரத்தில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடந்தது. அவர்கள் இருவருக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி நடிகை இனியா குடும்பத்தினர் 2வது காட்சி சினிமாவுக்கு சென்று இருந்தபோது, அவர்களது வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப் பட்டதாக கூறப்பட்டது. இதுபற்றி கரமணை போலீசில் புகார் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம் துறைமுக உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் தலைமையிலான போலீஸ் படையினர் இந்த கொள்ளை பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது நடிகை இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட ஷாபின் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.உடனடியாக போலீசார் ஷாபினையும் அவருக்கு உதவிய அவரது நண்பர் சஜியையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஷாபினுக்கு வருங்கால மனைவியாக உள்ள நடிகை சுவாதியின் அளவுக்கு வசதி உள்ளவனாக இல்லாதது பெரும் குறையாக இருந்தது. அவர் தனது உறவினர் ஒருவரது பெயிண்ட் கடையில் வேலை செய்து வந்ததால் அவருக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கவில்லை.இதனால் திருமணத்திற்கு முன்பு அதிகளவில் பணம் சேர்க்க திட்டமிட்டார். இதற்கு நேர் வழியில் சென்றால் உடனடியாக பணம் கிடைக்காது என்று நினைத்த ஷாபின் குறுக்கு வழியை தேர்ந்து எடுத்தார். தனக்கு நிச்சயிக்கப்பட்ட சுவாதி வீட்டில் அதிகளவில் நகை, பணம் இருப்பதை நோட்டமிட்டு தெரிந்து கொண்டார்.
இதை தொடர்ந்து அந்த வீட்டு கதவு சாவியை முதலில் திருடி உள்ளார். அதன் மூலம் போலி சாவியை தயாரித்துள்ளார். அந்த சாவியை தனது கூட்டாளிகள் சஜி, ராஜன், சஜு ஆகியோரிடம் கொடுத்து வைத்திருந்தார். சம்பவத்தன்று இனியா குடும்பத்தினருடன் ஷாபினும் சினிமாவுக்கு சென்றார். அங்கிருந்தபடியே தனது நண்பர்களுக்கு போன் செய்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றினார்.பின்னர் கொள்ளையடித்த பணத்தில் ஷாபின் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்தை பெற்றுக்கொண்டார். மீதி பணத்தை அவரது கூட்டாளிகள் பிரித்து கொண்டனர். முதலில் நடிகை இனியா வீட்டில் ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகை, கொள்ளை போனதாக புகார் கூறப்பட்டது. தற்போது பணம் மட்டுமே கொள்ளை போனதாகவும், நகை வீட்டில் பத்திரமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஷாபினின் கூட்டாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொள்ளையில் ஈடுபட்டதன் மூலம் இனியாவின் அக்கா சுவாதியுடனான ஷாபின் திருமணம் கேள்விக் குறியாகி விட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே