அடுத்த ஆசிய விளையாட்டுப்போட்டி 2019ம் ஆண்டு நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியை நடத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. 2010ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்தது. இது சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தியது.இந்த கறையை போக்க நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2019ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை டெல்லியில் நடத்த ஆர்வத்துடன் இருக்கிறது.இது குறித்து மத்திய விளையாட்டுத் துறை மந்திரி சர்பானந்தா சோனாவால் கூறியதாவது:–
2019ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியை டெல்லியில் நடத்த ஆர்வத்துடன் இருக்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம். இந்திய ஒலிம்பிக் கழகம் மூலம் ஆசிய போட்டியை நடத்த சரியான நேரத்தில் விண்ணப்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.2019ம் ஆண்டுக்கான ஆசிய போட்டியை நடத்த விண்ணப்பிப்பதற்கு ஜூலை 31ம் தேதியுடன் கெடு முடிகிறது. அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். செப்டம்பர் 20ம் தேதி ஆசிய ஒலிம்பிக் கழகம் தனது முடிவை அறிவிக்கும்.முதலாவது ஆசிய விளையாட்டு போட்டி டெல்லியில் 1951ம் ஆண்டு நடந்தது. அதன் பிறகு 1982ம் ஆண்டு 2வது முறையாக நடைபெற்றது. தற்போது 3வது முறையாக 2019ல் டெல்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு ஆர்வத்துடன் உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே