இதில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர் புட்டராஜூவிடம் 5518 வாக்குகள் வித்தியாசத்தில் ரம்யா தோல்வி அடைந்தார்.குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதற்கான காரணத்தை விளக்கி நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமைக்கும், டெல்லி தலைமைக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், மாண்டியாவில் நான் மீண்டும் களம் இறங்கியது அங்கிருக்கும் சில முக்கிய தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், எனக்காக அவர்கள் தேர்தல் பணியாற்றவில்லை. இது தொடர்பாக தேர்தல் நேரத்தில் ஒரு புகார் கடிதம் அனுப்பி இருந்தேன். ஆனாலும், அவர்கள் எனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டனர். இதனால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நான் தோல்வி அடைந்துள்ளேன்.
என்னுடைய அரசியல் வளர்ச்சியை விரும்பாத நடிகர் அம்பரீஷ் இந்த தடவை எனக்காக பிரசாரம் செய்ய வில்லை. மாண்டியாவில் முக்கிய தலைவர்களான மாதேகவுடா, சத்யானந்தா ஆகியோர் என்னை தோற்கடிக்க மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர் புட்ட ராஜூவுடன் கைகோர்த்து செயல்பட்டனர் என்று கூறியுள்ளார்.இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் மாதேகவுடா, சத்யானந்தா இருவரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருக்கிறோம். எங்கள் மீது யாரும் இத்தகைய புகாரை தெரிவித்ததில்லை.
தொகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக கட்சித் தலைமை ரம்யாவை வேட்பாளராக நிறுத்திய போதும் அவருக்கு ஆதரவாகவே செயல்பட்டோம்.ஆனால், ரம்யா எங்களையும், இளைஞர் காங்கிரசாரையும் முழுவதுமாக புறக்கணித்து விட்டார். காங்கிரஸ் கோட்டையான மாண்டியாவில் கட்சி தோற்றதற்கு ரம்யாவே காரணம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சியினர் மாநில தலைமைக்கும், டெல்லி தலைமைக்கும் புகார் கடிதம் அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே