ஜூலை 1ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளிலும் பேசும் ஏடிஎம்!…

மும்பை:-வங்கி ஏடிஎம்களை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி விசைப்பலகை உடையதாகவும், பதிவு செய்யப்பட்ட குரல் வழிகாட்டுதல்களுடன் இருக்க வேண்டும் என கடந்த 2009ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது. பழைய ஏடிஎம் இயந்திரங்களில் படிப்படியாக மாற்றுவதோடு, புதிதாக வைக்கப்படும் அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் இந்த வசதி இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் மூன்றில் ஒரு ஏடிஎம் இந்த வசதியுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் ஜூலை 1ம் தேதிக்கு முன்னதாக இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தற்போது உத்தரவிட்டுள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து ஏடிஎம்களிலும் குரல் வழிகாட்டி, பிரெய்லி விசைப்பலகை வசதி ஏற்படுத்துவது பற்றி வங்கிகள் திட்டம் வகுக்க வேண்டும். சக்கர நாற்காலிகள் பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் உயரத்தையும் கவனத்தில் கொண்டு ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட வேண்டும். அவர்களுக்காக சாய்தள பாதை அமைக்க வேண்டும். பார்வை குறைபாடுகள் உடையவர்களுக்காக வங்கி கிளைகளில் லென்ஸ் கண்ணாடிகளை கண்டிப்பாக வைக்க வேண்டும்.

இந்த லென்ஸ் கண்ணாடிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் வங்கியில் எந்த இடத்தில் உள்ளன என்பதை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அனைவரின் பார்வையும் படும் இடத்தில், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும். வங்கிகள் இந்த வசதிகளை எந்த அளவுக்கு செயல்படுத்தியுள்ளன என்பது பற்றி வாடிக்கையாளர் சேவை குழுவிடம் அவ்வப்போது விவரம் அளிக்க வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago