ரஜினிக்கு மைசூர் ராசியான இடம் ஆகும். ஏற்கனவே அங்கு படமாக்கப்பட்ட பல படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளன. எனவே மைசூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் மைசூர் அரண்மனையிலும் பெரும் பகுதி காட்சிகளை படமாகக் திட்டமிட்டு இருந்தனர்.ஆனால் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. மைசூரிலும் படப்பிடிப்பு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி செயல்பட்டதாக கண்டித்து கன்னடர்கள் படப்பிடிப்பு நடந்த இடத்தில் போராட்டம் நடத்தினர்.
ரஜினி உருவ பொம்மையை எரிக்கவும் முற்பட்டனர். இதையடுத்து படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்போடு ரஜினி, சோனாக்சி சின்ஹா நடித்த பாடல் காட்சி மற்றும் வசன காட்சிகளை படமாக்கி முடித்தனர்.
கன்னடர்கள் எதிர்ப்பினால் தொடர்ந்து அங்கு படப்பிடிப்பபை நடத்த இயலாத சூழ்நிலை நிலவுகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது. ரஜினியும் படத்தின் இன்னொரு நாயகியான அனுஷ்காவும் நடிக்கும் காட்சிகளை அங்கு படமாக்குகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே