கடந்த 25ம் தேதி மாலை காஷ்மீரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் கடுமையாக சண்டையிட்டனர். நீண்டநேரம் நடந்த துப்பாக்கி சண்டையில், மேஜர் முகுந்த் வரதராஜன் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அப்படியிருந்தும்,குண்டடிப்பட்ட தீவிரவாதி ஒருவன், சக ராணுவ வீரர்களை சுடுவதை கண்ட, முகுந்த் உயிரையும் பொருட்படுத்தாமல், அந்த தீவிரவாதியை சுட்டு கொன்றார்.இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், வீரமரணம் அடைந்தார். இதையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு மனைவி இந்து மற்றும் குழந்தை, உறவினர்கள் அனைவரும் வந்தனர். நண்பர்கள் வந்து,அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதற்கிடையில், நேற்று இரவு ராணுவ வீரரின் சடலம் சென்னை வந்தது. ராணுவ மருத்துவமனையில் சடலம் வைக்கப்பட்டது.
இன்று காலை 9 மணிக்கு உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும். உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்த, பார்வைக்கு வைக்கப்படும். குரோம்பேட்டை மயானத்தில் சடலம் தகனம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், அங்கு போதிய வசதியும், இடமும் இல்லாததால், பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்ய ராணுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.பகல் 11 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் ராணுவ மரியாதையுடன்,துப்பாக்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்படும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே