மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடி மீட்கும் பணியிலும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. இந்த விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து ‘பிங்’ எனப்படும் சமிக்ஞைகள் கடந்த 8-ந்தேதி கிடைத்ததால், கறுப்பு பெட்டியை விரைவாக மீட்கும் நோக்கில் அமெரிக்காவின் ‘புளூபின்-21’ என்ற நீர்மூழ்கி ரோபோ ஈடுபடுத்தப்பட்டது. இந்த ரோபோ 10 முறை நீருக்குள் சென்று தகவல்களை சேகரித்து வந்த பிறகும் விமானம் குறித்தோ, அதன் கறுப்பு பெட்டியை குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மீட்புக்குழுவினர் விரக்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக பனிப்பாறை மீது விபத்துக்குள்ளான ‘டைட்டானிக்’ கப்பலை கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் தேடி கண்டுபிடித்த தேடுதல் யுக்தியை மலேசிய விமானத்தை தேடும் பணியில் கையாள ஆஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது.டைட்டானிக் கப்பலை தேடிக் கண்டுபிடித்த ‘ஸைட் ஸ்கேன் ஸோனார்’ தொழில்நுட்ப உதவியுடன் ஆழ்கடல் பகுதியில் அடுத்தகட்ட தேடுதல் பணியை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு துறை மந்திரி டேவிட் ஜான்ஸ்ட்டன் இன்று தெரிவித்துள்ளார்.
மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்பாக கடந்த மாதம் கருத்து தெரிவித்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், ‘மலேசிய விமானத்தை தேடும் பணி வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டதல்ல. ஆனால், அந்த விமானத்தின் பாகங்களை தேடும் பணியை தவிர்த்துவிட இயலாது.ஏகப்பட்ட கழிவுகள் மிதக்கும் அந்த கடல் பகுதியில் விமானம் சம்பந்தப்பட்ட பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது உறுதிபடும் வரை அனைத்து ஆற்றலையும் செலவிட்டு, எங்கள் தேடுதல் வேட்டை தொடரும். நாங்கள் தேடிக் கொண்டே இருப்போம். இது மக்களுக்கு நாங்கள் பட்ட கடன். இந்த புதிருக்கான விடையை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டியது எங்களது கடமையுமாகும்’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே