ஐ.பி.எல்.:இன்று பஞ்சாப்,ஐதராபாத் அணிகள் மோதல்…

ஷார்ஜா:-7வது ஐ.பி.எல். ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்,ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும், 2-வது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வீழ்த்தியது. பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் 205 ரன் இலக்கையும், 2-வது ஆட்டத்தில் 191 ரன் இலக்கையும் எளிதாக கடந்து, எத்தகைய இமாலய இலக்கையும் எங்களால் எட்டுப்பிடிக்க முடியும் என்று பறைசாற்றி வீறுநடை போடுகிறது.

அந்த அணியின் மேக்ஸ்வெல் முதல் ஆட்டத்தில் 43 பந்துகளில் 95 ரன்னும், 2-வது ஆட்டத்தில் 45 பந்துகளில் 89 ரன்னும் குவித்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். அவருக்கு பக்கபலமாக டேவிட் மில்லரும் இரண்டு ஆட்டத்திலும் அரை சதம் கண்டு அசத்தினார்.மேக்ஸ்வெல், டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்துக்கு ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் விரைவில் அணை போட மறந்தால் அவர்களின் நிலை அதோ கதி தான் ஆக நேரிடும். அதேநேரத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு கடந்த இரண்டு ஆட்டங்களிலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை.ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினார்கள்.

ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் களம் காணும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரண்டு முறையும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியே வென்று இருக்கிறது.இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago