ஐ.பி.எல்: ஐதராபாத் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்!…

அபுதாபி:-ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று அபுதாபியில் நடைபெற்று வரும் 4-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் -சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் வாட்சன் பீல்டிங் தேர்வு செய்தார்.அதன்படி ஐதராபாத் அணியைச் சேர்ந்த தவான், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஐதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் பிஞ்ச் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவானுடன் வார்னர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆட முயன்றனர். ஆனால் ராஜஸ்தான் வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சினால் ரன் குவிக்க திணறினர். தவான் 38, வார்னர் 32 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடாததால் ஐதராபாத் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் குல்கர்னி, ரிச்சார்ட்சன், பாடியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது.

ஆனால் தொடக்கம் முதல் அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாயர், சாம்சன், ஜான்சன் ஆகியோர் தலா 3 ரன்கள் எடுத்த திருப்தியில் வெளியேறினர். ஆனால், மறுமுனையில் ரகானே நிதானமாக நின்று அரை சதம் அடித்தார். அவர் 59 ரன்னில் அவுட்டானதும் ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி இருந்தது.ஆனாலும் பின்னி- பால்க்னர் ஆட்டத்தால் ராஜஸ்தான் 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்னி 48 ரன்னுடனும், பால்க்னர் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

HYD – Inning

Batsman R B M 4s 6s S/R
Finch A. c Richardson K. b Kulkarni D. 2 5 3 0 0 40.00
Dhawan S. c Richardson K. b Bhatia R. 38 34 51 3 1 111.76
Warner D. c Richardson K. b Bhatia R. 32 35 54 1 0 91.43
Rahul L. c Rahane A. b Kulkarni D. 20 18 25 1 1 111.11
Sammy D. c Samson S. b Richardson K. 6 11 22 0 0 54.55
Rao V. not out 16 12 29 1 0 133.33
Sharma K. c Hodge B. b Richardson K. 4 5 10 0 0 80.00
Steyn D. not out 0 0 16 0 0 0
Extras: (w 9, b 1, lb 5) 15
Total: (20 overs) 133 (6.7 runs per over)
Bowler O M R W E/R
Kulkarni D. 3.6 0 23 2 6.39
Richardson K. 3.6 0 25 2 6.94
Faulkner J. 2.6 0 27 0 10.38
Tambe P. 3.6 0 23 0 6.39
Bhatia R. 3.6 0 22 2 6.11
Binny S. 0.6 0 7 0 11.67

RAJ – Inning

Batsman R B M 4s 6s S/R
Faulkner J. not out 8 2 14 2 0 400.00
Bhatia R. c Finch A. b Steyn D. 4 3 7 1 0 133.33
Binny S. not out 48 32 76 4 1 150.00
Rahane A. c Finch A. b Mishra A. 59 53 82 6 0 111.32
Nayar A. lbw Steyn D. 4 3 2 1 0 133.33
Samson S. c Dhawan S. b Kumar B. 3 9 14 0 0 33.33
Watson S. c Rahul L. b Sharma I. 3 7 16 0 0 42.86
Hodge B. c Sammy D. b Mishra A. 1 8 5 0 0 12.50
Extras: (w 2, lb 3) 5
Total: (19.3 overs) 135 (6.9 runs per over)
Bowler O M R W E/R
Sammy D. 1.6 0 19 0 11.88
Sharma K. 1.6 0 8 0 5.00
Steyn D. 3.6 0 29 2 8.06
Kumar B. 3.3 0 21 1 6.36
Sharma I. 3.6 0 29 1 8.06
Mishra A. 3.6 0 26 2 7.22

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago