அந்த விமானத்துக்கு என்ன ஆனது என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் குடும்பங்கள் இன்று வரை கண்ணீரில் தவித்து வருகின்றன.அந்த விமானம், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அந்த விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்து என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்து வைத்துள்ள கறுப்பு பெட்டியை தேடும் வேட்டை நடந்து வருகிறது.
கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற ஒலியைக்கேட்டு, அது இருக்கிற இடத்தைத் தேடிக்கண்டு பிடிக்கும் ‘டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்’ என்னும் கருவிகளை ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க்கப்பலும், ‘எச்.எம்.எஸ். எக்கோ’ என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் இழுத்துச்சென்று தேடுகின்றன. மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானது என கருதப்படுகிற ‘பிங்’ சமிக்ஞைகள் கடந்த 5-ந்தேதி 2 முறை கிடைத்தது. தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் இரு முறை கிடைத்துள்ளது. இந்த 4 சமிக்ஞைகளுமே மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
மாயமான விமானத்தை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய குழுவுக்கு தலைமை தாங்குகிற ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி ஆங்கஸ் ஹூஸ்டன் பெர்த் நகரில் நேற்று கூறுகையில், “எனக்கு இப்போது திடமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஒன்று, மாயமான மலேசிய விமானத்தை நாங்கள் கண்டுபிடிப்போம் அல்லது அந்த விமானத்துக்கு நேர்ந்தது என்ன என்பதை கண்டறிவோம். இதற்கு அதிக காலம் ஆகாது. ஒரு சில நாட்களில் இது தெரிந்துவிடும். மாயமான விமானம், கடலுக்கு அடியில் கடைசியாக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் உறுதி செய்ய முடியும்” என கூறினார்.
இதேபோன்று ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமை கமிஷனர் மார்டின் தோலன் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் இன்னும் நெடிய தூரம் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் விமானத்தை தேடும் வேட்டையில் இதற்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதகமான அம்சங்கள் உள்ளன” என கூறினார்.
இந்நிலையில், மாயமான விமானத்தை தேடும் பணி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினம் 75 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பில் தேடுதல் வேட்டை நடந்தது. நேற்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாகக் கொண்டு, 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவில் தேடப்படுகிறது.
இந்த குறுகிய பிரதேசத்தில் மாயமான விமானத்தை தேடும் பணியில் 10 ராணுவ விமானங்கள், 4 பயணிகள் விமானங்கள், 13 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. எனவே ஒரு சில தினங்களில் இந்த தேடுதல் வேட்டை முடிவுக்கு வரும், விமானத்தின் கதி உலகுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே