கடந்த 2001ம் ஆண்டில் மோடி முதல் முறை முதல்வரான 3 மாதங்களுக்கு பிறகு, ராஜ்கோட் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அப்போது வேட்பு மனுவில், மனைவி பற்றி குறிப்பிடாமல் காலியாக விட்டு விட்டார். அப்போது மோடியின் திருமணம், மனைவி குறித்து பல கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் துண்டு பிரசுரங்களை வினியோகித்தது. அதன்பின், கடந்த 2012ம் ஆண்டு மணிநகர் சட்டசபை தொகுதியில் மோடி போட்டியிட்ட போதும் வேட்பு மனுவில் மனைவி பெயர் குறிப்பிடவில்லை.இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி சதாசிவம், ரஞ்சன் கோகய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, மனுவை தள்ளுபடி செய்தது. இதுபோன்ற பிரச்னைகளில் தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்து, வேட்பு மனுவில் எல்லா விவரங்களையும் கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
முமுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்1951ன்படி, வேட்பு மனுவில் மனைவியின் சொத்து விவரங்களையும் வேட்பு மனுவில் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியது. இதனால், இந்த நாடாளுமன்ற தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, மோடி என்ன செய்ய போகிறார் என்பதை அறிய காங்கிரசார் உள்பட எல்லோரும் ஆர்வமாக காத்திருந்தனர்.இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் நரேந்திர மோடி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என்றும், அவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
அதே சமயம், மனைவியின் வருமானம், வருமான வரி ரிட்டர்ன் பற்றியோ, பான் கார்டு பற்றியோ எந்த தகவலும் எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.பெரியோர்கள் தனக்கு 17 வயதில் ஜசோதா பென்னை திருமணம் செய்து வைத்ததாகவும், திருமணமான 2 வாரங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டதாகவும் மோடி கூறியுள்ளார். குஜராத்தின் வட்நாகர் என்ற கிராமம்தான் மோடியின் சொந்த ஊர். அங்கிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது பிராமண்வடா. இந்த கிராமத்தில்தான் மோடியின் மனைவி ஜசோதா பென் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.மோடி தனக்கு திருமணமாகி விட்டதை முதல் முறையாக ஒப்பு கொண்டிருப்பது அவருடைய பாப்புலாரிட்டிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே