பேட்டிங்கில் அதிரடி வீரர் கெய்ல்,ஸ்மித்,சிம்மன்ஸ்,சாமுவேல்சும் கைகொடுக்கின்றனர்.பின் வரிசையில் கேப்டன் சமி, பிராவோ ‘ருத்ர தாண்டவம்’ ஆட காத்திருக்கின்றனர். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக, இவர்களது எழுச்சி தான் கடைசிநேரத்தில் வெற்றிபெற உதவியது. இது இன்றும் தொடரும் எனத் தெரிகிறது.
பவுலிங்கை பொறுத்தவரையில் ‘டுவென்டி–20’ தரவரிசையில் 1, 2 வது இடத்திலுள்ள பத்ரீ (10 விக்.,), ‘சுழல்’ மாயாவி சுனில் நரைன் (6 விக்.,) ‘கூட்டணி’ இலங்கைக்கு சிக்கல் தருவது உறுதி. வேகப்பந்து வீச்சில் கிருஷ்மர் சான்டோகியும் அதிர்ச்சி தரலாம். தவிர, பயிற்சி போட்டியில் இலங்கையை வீழ்த்தியதால், சமி படையினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இலங்கை அணி தென் ஆப்ரிக்கா ( 5 ரன்கள்), நெதர்லாந்து (9 விக்.,), நியூசிலாந்து (59 ரன்கள்) அணிகளை வென்றது. இங்கிலாந்திடம் (6 விக்.,) மட்டும் வீழ்ந்தது.
தவிர, இத்தொடருடன் ‘டுவென்டி–20’ போட்டிகளுக்கு விடை கொடுக்கத் திட்டமிட்டுள்ள ‘சீனியர்’ வீரர்கள் சங்ககரா, ஜெயவர்தனா இருவருடன் தில்ஷனும் ‘பார்மில்’ உள்ளது எதிரணிக்கு சிக்கல்.இளம் வீரர்கள் குசல் பெரேரா, மாத்யூஸ், தடையில் இருந்து மீண்டு இன்று களமிறங்கும் கேப்டன் சண்டிமால் என, பெரும் பேட்டிங் படை காத்திருக்கிறது.
கடந்த போட்டியில் திடீரென அணியில் இடம் பெற்று, 3 ரன்னுக்கு 5 விக்கெட் சாய்த்த ஹெராத், சேனநாயகே அடங்கிய ‘சுழல்’ கூட்டணியுடன் இன்று மெண்டிசும் சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது. தவிர, கடைசி கட்ட ஓவர்களில் மிரட்டும் ‘கிங் ஆப் டெத்’ என்ற மலிங்காவின் ‘யார்க்கர்’, குலசேகரா பலமும் அணிக்கு வெற்றி தேடித்தரலாம்.
கடந்த 2012 ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடர் பைனலில், வெஸ்ட் இண்டீஸ் அணி (137/6), இலங்கையை(101) சுருட்டி, சாம்பியன் ஆனது. இதற்கு இன்று இலங்கை அணி பழி தீர்க்க முயற்சிக்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே