எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் நக்மாவின் பெயரையும் இணைத்து அக்கட்சியின் மேலிடம் சமீபத்தில் அறிவித்தது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் தொகுதியில் நக்மாவுக்கு சீட் வழங்கப்பட்டது.
வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நக்மா, வேட்பு மனுவினை தாக்கல் செய்வதற்காக காங்கிரஸ் தொண்டர்களின் புடை சூழ நேற்று மீரட் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உடன் இருக்க முடியும் என்பதால் அவருடன் 5 பேரை மட்டுமே போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை வழங்க தயாரான நக்மா, பூர்த்தி செய்யப்பட்ட வேட்பு மனுவினை கையில் வைத்திருந்த மீரட் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சலிம் பார்தி திடீரென்று காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.நக்மாவுடன் 5 பேர் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்ற பின்னர், அவருடன் கூடுதலாக வந்திருந்த நபர்களை வாசலிலேயே வழிமறித்து தடுத்து நிறுத்திய போலீசார் வெளியே நிற்க வைத்திருந்தனர்.அந்த கூட்டத்தில் ஒருவராக சிக்கிக் கொண்ட சலிம் பார்தி, நக்மாவின் வேட்பு மனு தன்னிடம் உள்ளதாக கூறி, உள்ளே அனுமதிக்கும்படி போலீசாரிடம் கூறி எவ்வளவோ வாதாடியும் அவரால் உள்ளே போக முடியவில்லை.இதனால் ஏமாற்றமடைந்த நக்மா வேட்பு மனுவை தாக்கல் செய்யாமல் திரும்ப நேரிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே