கூகுள் இணையத்தில் அதிகம் பேரால் தேடப்பட்ட முதல்-அமைச்சர்கள்!…

சென்னை:-இந்தியாவில் 16-வது பாராளுமன்ற தேர்தல் தேதிகள் நெருங்கி வந்துகொண்டிருக்கிற நேரத்தில், பல்வேறு மாநிலங்களின் முதல்-அமைச்சர்கள் மீது பொதுமக்களின் பார்வை திரும்பி இருக்கிறது.தேர்தலில் அவர்கள் சேர்ந்துள்ள கட்சிகள் வெற்றி பெறுவதை உறுதிப்படுவதற்காக, இவர்கள் ஆற்றப்போகிற பங்கு மற்றும் நடவடிக்கைகள் மீது வாக்காளர்களின் கவனம் அதிகம் இருந்து வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந்தேதி முதல் கடந்த 13-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முதல்-அமைச்சர்களில் யாரை பொதுமக்கள் அதிக முறை இணையதளத்தில் பார்வையிட்டுள்ளனர், தேடியுள்ளனர் என்பது குறித்து ‘கூகுள்’ இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இணையதளத்தில் அதிகமாக தேடப்படும் இந்தியாவில் உள்ள மாநில முதல்-அமைச்சர்களில், நரேந்திர மோடி(குஜராத்) முதல் இடத்தையும், ஜெயலலிதா(தமிழ்நாடு) 2-வது இடத்தையும், அகிலேஷ் யாதவ்(உத்தர பிரதேசம்) 3-வது இடத்தையும், மம்தா பானர்ஜி(மேற்கு வங்காளம்) 4-வது இடத்தையும், நிதீஷ் குமார்(பீகார்) 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இணையதளத்தில் அதிகம் பேரால் தேடப்பட்ட பா.ஜ.க.முதல்-மந்திரிகளிலும் நரேந்திர மோடியே முதல் இடத்தை பிடித்துள்ளார். 2-வது இடத்தை வசுந்தரா ராஜே(ராஜஸ்தான்) பெற்றுள்ளார்.அதிகம் பேரால் தேடப்பட்ட காங்கிரஸ் கட்சி முதல்- அமைச்சர்களில் தருண் கோகோய் (அசாம்) முதல்- இடத்தையும், உம்மன் சாண்டி (கேரளா) 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago