20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்கரா ஓய்வு அறிவிப்பு!…

கொழும்பு:-வங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை முடிந்ததும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா அறிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு சங்கக்கரா அளித்துள்ள பேட்டியில் ‘இது தான் எனது கடைசி 20 ஓவர் உலக கோப்பை போட்டி என்பதில் சந்தேகமில்லை.

இந்த உலக கோப்பைக்கு பிறகு, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடமாட்டேன். இது வருத்தமானது தான். ஆனால் அது தான் உண்மை. அதற்காக எனது 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டதாக அர்த்தம் இல்லை.சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றாலும், மற்ற வகையான 20 ஓவர் போட்டிகளில் (ஐ.பி.எல். போட்டி உள்ளிட்டவை) விளையாட விரும்புகிறேன்’ என்றார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான 36 வயதான சங்கக்கரா இதுவரை 20 ஓவர் கிரிக்கெட்டில் 50 ஆட்டங்களில் ஆடி 7 அரைசதத்துடன் 1,311 ரன்கள் (சராசரி 32.77) சேர்த்துள்ளார்.

அனைத்து 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடுவதை எதிர்நோக்கியுள்ள சங்கக்கரா, ‘2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் களம் இறங்குவதே எனது உடனடி இலக்கு. அதுவரை ஆட்டத்திறன் மற்றும் உடல்தகுதியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வேன் என்று நம்புகிறேன். எனது எதிர்காலம் குறித்து தேர்வாளர்களுடன் பேசுவேன்’ என்றும் சங்கக்கரா குறிப்பிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago