ஏ.ஆர் முருகதாஸின் அடுத்த படம் பற்றிய தகவல்கள்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது விஜய்-சமந்தா நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.ஏற்கனவே இவர் பாலிவுட்டில் இயக்கிய ஹாலிடே திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் விஜய்யை வைத்து இவர் இயக்கி வரும் படம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. எனவே தற்போது ஏ.ஆர்.முருகதாஸ், தனது கவனத்தை அடுத்த படத்தின் மீது செலுத்தியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் தெலுங்கு படம் என்றும் தெலுங்கில் இதுவரை யாரும் எடுக்காத மெகா பட்ஜெட்டில் அவர் எடுக்கவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மகேஷ்பாபு, ராம் சரண்தேஜா ஆகிய இருபெரும் நடிகர்கள் இணைகின்றனர். இவர்களுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் காத்ரீனா கைப் நடிக்க உள்ளனர். மற்ற நடிகர் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தெலுங்கில் சிரஞ்சீவி, த்ரிஷா நடித்த ஸ்டாலின் என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கியவர். தெலுங்கில் இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், தற்போது மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தை இயக்கவிருக்கிறார்.இந்த படத்தை ஆந்திர மாநில அமைச்சர் ஒருவரின் பினாமி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த நிறுவனம் ஏ.ஆர்.முருகதாசுக்கு ரூ.20 கோடி சம்பளம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago