முதல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வரும் ஷேன்வாட்சன் இதுவரை 61 ஆட்டத்தில் விளையாடி 1,887 ரன்கள் எடுத்து இருப்பதுடன் 54 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ஷேன் வாட்சன் கருத்து தெரிவிக்கையில், ‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பதை கவுரவமாக கருதுகிறேன்.அசாதாரணமான அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் எப்பொழுதும் எனக்கு அரிய வாய்ப்புகளை அளித்து வருகிறது. சிறந்த ஆட்டத்தை தொடர்ந்து அளிப்பதுடன், வெற்றி உத்வேகத்தை தக்க வைக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். 2008–ம் ஆண்டில் வென்றதை போல் மீண்டும் நாங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன் கடந்த ஆண்டு இறுதிபோட்டி வரை வந்தோம்.
இந்த ஆண்டு கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன். அணி நிர்வாகத்தினர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவேன்’ என்றார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கும் டிராவிட் கூறுகையில்,
‘புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷேன்வாட்சன், உலகின் சிறந்த ஆல்–ரவுண்டர் மட்டுமன்றி, திறமையான தலைமை பண்பும் கொண்டவர். முதல் போட்டி முதல் அணியினருடன் இருந்து வரும் வாட்சனுக்கு எல்லா வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றி நன்கு தெரியும். வாட்சனின் தலைமையில் ராஜஸ்தான் அணி நல்ல உத்வேகத்துடன் செயல்படும்’ என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே