நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா 246 ரன்கள் முன்னிலை…நியூ (24/1)…

வெலிங்டன்:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. வில்லியம்சன் அதிகபட்சமாக 47 ரன் எடுத்தார். இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், முகமது ஷமி 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து இருந்தது. தவான் 71 ரன்னும், இஷாந்த் சர்மா 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. ‘நைட் வாட்ச்மேனாக’ களம் இறங்கிய இஷாந்த்சர்மா 26 ரன் எடுத்து இருந்தபோது போல்ட் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வீராட் கோலி களம் வந்தார். மறுமுனையில் இருந்த தவான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் துரதிருஷ்டவசமாக 98 ரன்னில் ஆட்டம் இழந்தார். 127 பந்துகளில் 14 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
முதல் டெஸ்டில் தவான் செஞ்சூரி அடித்திருந்தார். ரோகித்சர்மா வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்திருந்தது. கோலி 27 ரன்னிலும், ரகானே 22 ரன்னிலும் களத்தில் இருந்தனர். பொறுப்புடன் விளையாடி வந்த கோலி மதிய உணவு இடைவேளைக்கு பிறகு ‘அவுட்’ ஆனார். அவர் 38 ரன்கள் எடுத்தார். 7–வது விக்கெட்டான ரகானே– கேப்டன் டோனி ஜோடி சிறப்பாக விளையாடி ரன்னை உயர்த்தியது. ரகானே 93 பந்தில் 50 ரன்னை (7 பவுண்டரி) தொட்டார். 81–வது ஓவரில் நியூசிலாந்து புதிய பந்தை எடுத்தது. 83.3–வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னை தொட்டது.

தேனீர் இடைவேளைக்கு பிறகு டோனி 50 ரன்னை எடுத்தார். இந்த ஜோடியை போல்ட் பிரித்தார். டோனி 68 ரன் எடுத்திருந்தபோது பெவிலியன் திரும்பினார். 86 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 348 ஆக இருந்தது. 7–வது விக்கெட் ஜோடி 120 ரன் எடுத்தது சிறப்பானதாகும். 8–வது விக்கெட்டுக்கு ரகானேயுடன் ரவிந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். அவர் தன் பங்குக்கு 26 ரன்கள் சேர்த்தார்.அடுத்து ஜாகீர்கான் களம் வந்தார். 98.4 ஓவரில் இந்திய அணி 400 ரன்னை குவித்தது. மறுமுனையில் இருந்த ரகானே தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 99 ரன்னில் இருந்து பவுண்டரி அடித்து அவர் 103 ரன்னை எடுத்தார். 149 பந்துகளில் 15 பவுண்டரியுடன் அவர் செஞ்சூரி அடித்தார். 5–வது டெஸ்டில் விளையாடும் ரகானேவுக்கு இது முதல் சதம் ஆகும். ரகானே 118 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். 158 பந்துகளில் 17 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார்.
இந்திய அணி 102.4 ஓவரில் 438 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. இது நியூசிலாந்து ஸ்கோரை விட 246 ரன் கூடுதலாகும். ஜாகீர்கான் கடைசியாக 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். போல்ட், சவுத்தி, வாக்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

246 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2–வது இன்னிங்சை ஆடியது. ஆட்டத்தின் 2–வது ஓவரில் தொடக்க ஜோடியை ஜாகீர்கான் பிரித்தார். புல்டன் 1 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.இன்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்து இருந்தது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் இருக்கிறது. இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. நியூசிலாந்து அணியின் எஞ்சிய 9 விக்கெட்டுகளை 221 ரன்னுக்குள் கைப்பற்றினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம். நாளை இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினால் இன்னிங்ஸ் வெற்றியை பெற முடியும்.

IND – 1st Inning

Batsman R B M 4s 6s S/R
Khan Z. c Watling B. b Wagner N. 22 19 0 4 0 115.79
Shami M. not out 0 1 0 0 0 0
Sharma I. c Watling B. b Boult T. 26 50 2 3 0 52.00
Jadeja R. c Fulton P. b Wagner N. 26 16 1 6 0 162.50
Dhawan S. c Watling B. b Southee T. 98 127 18 14 1 77.17
Vijay M. c Watling B. b Southee T. 2 6 4 0 0 33.33
Pujara C. lbw Boult T. 19 59 12 2 0 32.20
Kohli V. c Rutherford H. b Wagner N. 38 93 1 4 0 40.86
Sharma R. b Neesham J. 0 3 0 0 0 0
Rahane A. c Boult T. b Southee T. 118 158 3 17 1 74.68
Dhoni M. c Watling B. b Boult T. 68 86 1 9 1 79.07
Extras: (w 6, b 8, nb 2, lb 4) 20
Total: (102.4 overs) 438 (4.3 runs per over)
Bowler O M R W E/R
Anderson C. 16 2 66 0 4.13
Neesham J. 18 2 62 1 3.44
Southee T. 20 0 93 3 4.65
Wagner N. 22.4 3 106 3 4.73
Boult T. 26 7 99 3 3.81

NZ- 2nd Inning

Batsman R B M 4s 6s S/R
Fulton P. b Khan Z. 1 6 0 0 0 16.67
Rutherford H. not out 18 32 0 3 0 56.25
Williamson K. not out 4 17 0 0 0 23.53
Extras: (nb 1) 1
Total: (9 overs) 24 (2.7 runs per over)
Bowler O M R W E/R
Sharma I. 3 0 9 0 3.00
Khan Z. 3 2 7 1 2.33
Shami M. 3 0 8 0 2.67

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago