முதல் 50 இடங்களைப் பிடித்தவர்கள் மொத்தம் 770 கோடி அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.47,940 கோடி) நன்கொடையாக அளித்துள்ளனர். 290 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள (சுமார் ரூ.18 ஆயிரத்து 55 கோடி) நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.இது முந்தைய 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட நன்கொடையின் ஒட்டு மொத்த அளவாகும். நாட்டின் பெரும் கொடையாளியாக இருந்த சிலர் 2013-ம் ஆண்டின் பெரும் கொடையாளிகள் பட்டியலில் முதல் 50 இடத்தில் இடம்பெறவில்லை. காரணம் முந்தைய ஆண்டு வழங்குவதாக உறுதியளித்திருந்த தொகை, 2013-ல் கொடுக்கப்பட்டிருந்தாலும் அதனை முந்தைய 2012-ம் ஆண்டுக்கான நன்கொடையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனால் அவர்கள் அதிக தொகை வழங்கியிருந்தாலும், 2013-ம் ஆண்டுக்கான கணக்கில் குறைவான தொகையே பதிவாகி இருந்தது.மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா இருவரும் 18.13 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.1127 கோடி) நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஆனால், 2004- ம் ஆண்டு 330 கோடி அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.20 ஆயிரத்து 545 கோடி) வழங்குவதாக உறுதி யளித்திருந்தனர். அத்தொகையில் இது கழிக்கப்பட்டு விட்டது.
சிஎன்என் நிறுவனர் டென்டர்னர், பெர்க் ஷையர் ஹாத்வே தலைவர் வாரன் பபெட் ஆகியோர் ஏராளமான தொகையை நன்கொடையாக அளித்திருந்தனர்.அதிக தொகை கொண்ட முதல் 30 நன்கொடைகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் இத்தொகை பெரும்பாலும் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் துறைகளுக்காகவே கொடுக்கப் பட்டுள்ளது. கட்டிடங்களுக்காகக் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலர் இறப்புக்குப் பின் உயில் எழுதி வைத்து, அச்சொத்துகளும் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 50 பெரும் கொடையாளிகள் பட்டியலில் ஜார்ஜ் மிட்செல், 3-ம் இடத்தில் நைக் நிறுவன தலைவர் பிலிப் நைட் மற்றும் அவரது மனைவி பெனலோப், 4-ம் இடத்தில் நியூயார்க் முன்னாள் மேயர் மைக்கேல் புளூம்பெர்க் ஆகியோர் உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே