அது ‘கோச்சடையான்’ படம் வேறு எந்த ஒரு இந்திய நடிகருக்கு ரிலீசாகாத வண்ணம் உலகம் முழுவதும் சுமார் 6000 தியேட்டர்களில் கோச்சடையான் ரிலீசாகிறது.சர்வதேச அளவில் அவதார் படம் 10 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீசாகி சாதனை புரிந்தது. அதன்பிறகு வந்த படங்களில் ‘அவெஞ்சர்ஸ்’, ‘தி டார்க் நைட் ரைசஸ்’ ஆகிய படங்கள் அதிக தியேட்டர்களில் ரிலீசாகின. அடுத்து, அதிக தியேட்டர்களில் ரிலீசாகும் ஒரே படம் ‘கோச்சடையான்’ தான்.இந்தியப் படங்களை பொறுத்தவரை ‘க்ரிஷ் 3′ , ‘தூம் 3′ ஆகிய படங்கள் 4000 தியேட்டர்கள் வரை ரிலீசாகியது. ரஜியின் ‘எந்திரன்’ படம் 3000 தியேட்டர்களில் ரிலீசாகியது. இப்போது அத்தனை படங்களின் சாதனைகளையும் ஒன்றுமில்லாமல் செய்யும் விதத்தில் ரஜினியின் ‘கோச்சடையான்’ 6000 ப்ளஸ் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக ஈராஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப்படம் ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீசாகிறது. தென்கிழக்காசிய நாடுகளான ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், சீனா, கொரியாவில் அதிக அரங்குகளில் கோச்சடையான் வெளியாகவிருக்கிறது.அமெரிக்கா, ஐரோப்பாவில் இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 1000க்கும் அதிகமான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில் மும்முரம் காட்டுகிறது ஈராஸ் நிறுவனத்தின் ஐயங்கரன் இன்டர்நேஷனல். தெலுங்கில் மட்டும் 1000 தியேட்டர்களுக்கு மேல் கோச்சடையானின் தெலுங்கு வெர்ஷனான விக்ரமசிம்ஹா ரிலீசாகிறது.
உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் இத்தனை தியேட்டர்களில் ரிலீசாவது என்பது இதுதான் முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே