முதல் டெஸ்டில் நியூசிலாந்து ரன் குவிப்பு(329/4)…

ஆக்லாந்து:-இந்தியா– நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்கியது. இந்திய அணி கடைசியாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடியது. டர்பன் டெஸ்டில் விளையாடிய வீரர்களே இடம் பெற்றனர். அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. புதுமுக வீரர் இஷ்வர் பாண்டேக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இரு அணி வீரர்கள் விவரம்:– இந்தியா: டோனி (கேப்டன்), முரளி விஜய், தவான், புஜாரா, வீராட் கோலி, ரோகித்சர்மா, ரகானே, ரவிந்திர ஜடேஜா, ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, முகமது ஷமி.

நியூசிலாந்து: மேக்குல்லம் (கேப்டன்), ரூதர்போர்டு, புல்டன், வில்லியம்சன், டெய்லர், ஆண்டர்சன், வாட்லின், ஜோதி, சவுத்தி, வாக்னெர், போல்ட்.

இந்திய அணி கேப்டன் டோனி ‘டாஸ்’ வென்று நியூசிலாந்தை முதலில் விளையாட அழைத்தார். அவரது கணிப்புக்கு ஏற்ற வகையில் இந்திய பந்துவீச்சு தொடக்கத்தில் சிறப்பாக இருந்தது. 30 ரன் எடுப்பதற்குள் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து திணறியது. ரூதர்போர்டு 6 ரன்னிலும், முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் 3 ரன்னிலும், இஷாந்த்சர்மா பந்தில் ஆட்டம் இழந்தனர். புல்டன் 13 ரன்னில் ஜாகீர்கான் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.4–வது விக்கெட்டான வில்லியம்சன்– கேப்டன் மேக்குல்லம் ஜோடி நியூ சிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் இந்திய பந்துவீச்சை நம்பிக்கையோடு எதிர் கொண்டு விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினார்கள். 43.2 –வது ஓவரில் நியூசிலாந்து 150 ரன்னை தொட்டது. தேனீர் இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்து இருந்தது. வில்லியம்சன் 79 ரன்னிலும், மேக்குல்லம் 71 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளை யாடினார்கள். 55.2–வது ஓவரில் அந்த அணி 200 ரன்னை தொட்டது. இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளி இருவரும் சதம் அடித்தனர். கேப்டன் மேக்குல்லம் முதலில் செஞ்சூரி அடித்தார். 135 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் 100 ரன்னை தொட்டார்.83–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 8–வது சதம் ஆகும். இந்தியாவுக்கு எதிராக 3–வது சதத்தை எடுத்தார். அவரை தொடர்ந்து வில்லியம்சன் 138 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் சதத்தை எடுத்தார். 30–வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 2–வது செஞ்சூரி ஆகும். இருவரது ஆட்டத்தால் நியூசிலாந்து ரன் மளமள என்று உயர்ந்தன. இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறிணர்.இறுதியில் ஜாகிர் கான் 113 ரன்கள் எடுத்து இருந்த வில்லியம்சனை வெளியேற்றினார்.அடுத்து ஆண்டர்சன் களமிறங்கினார். இன்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 329 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.மெக்கல்லம் 143 ரன்களுடனும், ஆண்டர்சன் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

NZ 1st Inning

Batsman R B M 4s 6s S/R
Fulton P. lbw Khan Z. 13 35 53 2 0 37.14
Rutherford H. c Rahane A. b Sharma I. 6 30 41 1 0 20.00
Williamson K. c Dhoni M. b Khan Z. 113 172 311 10 2 65.70
Taylor R. c Jadeja R. b Sharma I. 3 15 24 0 0 20.00
McCullum B. not out 143 210 368 18 2 68.10
Anderson C. not out 42 78 93 5 1 53.85
Extras: (w 3, b 1, lb 5) 9
Total: (90 overs) 329 (3.7 runs per over)
Bowler O M R W E/R
Shami M. 21.6 6 66 0 3.06
Khan Z. 22.6 2 98 2 4.34
Sharma I. 20.6 4 62 2 3.01
Jadeja R. 19.6 1 81 0 4.13
Kohli V. 0.6 0 4 0 6.67
Sharma R. 2.6 0 12 0 4.62

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago