இந்நிலையில் 2-வது நாளான நேற்றும் சங்கக்கராவின் அட்டகாசமான பேட்டிங் தொடர்ந்தது. மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. விதநாகே 35 ரன்னிலும், தில்ருவான் பெரேரா ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.இதைத் தொடர்ந்து சங்கக்கரா இறுதி கட்ட பேட்ஸ்மேன்களின் ஒத்துழைப்புடன் முச்சதத்தை நோக்கி துரிதமாக முன்னேறினார். அஜந்தா மென்டிஸ் 47 ரன்களும், லக்மல் ரன் ஏதுமின்றியும் அவுட் ஆனார்கள். கடைசி விக்கெட்டுக்கு நுவான் பிரதீப் இறங்கிய போது சங்கக்கராவின் முச்சதத்திற்கு 23 ரன்கள் தேவைப்பட்டது.இதன் பிறகு அதிரடி காட்டிய சங்கக்கரா, ஷகிப் அல்-ஹசனின் ஓவரில் தொடர்ந்து பவுண்டரி, சிக்சர், சிக்சர் விரட்டியடித்து தனது முதலாவது முச்சதத்தை நிறைவு செய்தார். இறுதியில் அவர் 319 ரன்களில் (482 பந்து, 32 பவுண்டரி, 8 சிக்சர்) கேட்ச் ஆனார். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த இன்னிங்சில் 36 வயதான சங்கக்கரா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
*137 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட 27-வது முச்சதம் இதுவாகும்.
*முச்சதம் அடித்த 3-வது இலங்கை நாட்டவர் சங்கக்கரா ஆவார். இதற்கு முன்பு ஜெயசூர்யாவும் (340 ரன், இந்தியாவுக்கு எதிராக, 1997), மஹேலா ஜெயவர்த்தனேவும் (374 ரன், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2006) இலங்கை அணிக்காக முச்சதம் அடித்துள்ளனர்.
*சங்கக்கரா 273 ரன்களை எட்டிய போது 11 ஆயிரம் ரன்களை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை தாண்டிய வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே